பாக்கித்தான் அரசியலமைப்பு
பாக்கித்தான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பு (Constitution of the Islamic Republic of Pakistan, உருது:آئین پاکستان), அல்லது 1973 அரசியலமைப்பு பாக்கித்தானின் மீயுயர் சட்டமாகும்.[1] சுல்பிக்கார் அலி பூட்டோவின் அரசினால் எதிர்க்கட்சிகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10 அன்று ஏற்கப்பட்டு ஆகத்து 14, 1973 அன்று ஏற்புறுதி செய்யப்பட்டது.[2]
பாக்கித்தான் அரசியலமைப்பு | |
உருவாக்கப்பட்டது | 19 ஏப்ரல் 1973 |
நிறைவேற்றம் | 14 ஆகத்து 1973 |
இடம் | இசுலாமாபாத் |
வரைவாளர் | 12வது நாடாளுமன்றம் |
கைச்சாத்திட்டோர் | 12வது நாடாளுமன்றம் (ஒருமித்த) |
நோக்கம் | 1962 அரசியலமைப்பிற்கு மாற்றாகவும் 1970 சட்ட உருவரை ஆணையை மாற்றவும் |
இந்தக் கட்டுரை உருது உரை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு இடதிலிருந்து வலதாக சேர்க்கப்படாத எழுத்துக்களோ பிற குறியெழுத்துக்களோ உருது உரைக்குப் பதிலாக தெரியலாம். |
இந்த அரசியலமைப்பு பாக்கித்தானின் சட்டம், அரசியல் மற்றும் அமைப்பிற்கான வழிகாட்டுதலாக உள்ளது. பாக்கித்தானின் எல்லைகள், மக்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள், நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் ஆணைகள், அரசியல் கட்டமைப்பு, பல்வேறு அரசு அமைப்புகள், படைத்துறையின் கட்டமைப்பு போன்றவற்றை விவரிக்கின்றது.[3] முதல் மூன்று அத்தியாயங்கள் அரசின் மூன்று துறைகளிடையேயான விதிகள், உரிமைகள் மற்றும் தனி அதிகாரங்களை வரையறுக்கின்றது: ஈரவை சட்டவாக்க அவை; பிரதமரை முதன்மைச் செயல் அலுவலராகக் கொண்ட செயலாக்கப் பிரிவு; உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலமைந்த மீயுயர் கூட்டரசு நீதி முறைமை[3] அரசியலமைப்பு குடியரசுத் தலைவரை நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் அலங்கார நாட்டுத் தலைவராக வரையறுக்கின்றது.[4] அரசியலமைப்பின் முதல் ஆறு விதிகள் அரசாட்சி முறைமையை விவரிக்கின்றன:கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகவும் இசுலாமை தேசிய சமயமாகவும் குறிக்கின்றது.[5]
1973இல் ஏற்கப்பட்டாலும் 1956இல் முதல் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட மார்ச் 23 ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளாக கொண்டாடப்படுகின்றது.[6]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Abiad, Nisrine (2008). Sharia, Muslim states and international human rights treaty obligations : a comparative study. London: British Institute of International and Comparative Law. pp. 96–200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905221-41-7.
- ↑ Enterprise Team (Jun 1, 2003). "The Constitution of 1973`". The Story of Pakistan. The Story of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 2011-10-15.
- ↑ 3.0 3.1 Constitution of Pakistan. "Constitution of Pakistan". Constitution of Pakistan. Constitution of Pakistan. Archived from the original on 7 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Part III. The Federation of Pakistan: Chapter 1; The President". Const. of Pakistan. Const. of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
- ↑ "First Six Articles".
- ↑ "Constitutional history of Pakistan". National Assembly of Pakistan pr of Pakistan press.
{{cite web}}
: Explicit use of et al. in:|last1=
(help)CS1 maint: ref duplicates default (link)
வெளி இணைப்புகள்
தொகு- This article incorporates public domain material from websites or documents of the Library of Congress Country Studies. – பாக்கித்தான்
- Constitution of Islamic Republic of Pakistan பரணிடப்பட்டது 2018-09-07 at the வந்தவழி இயந்திரம், including Fundamental Rights
- Full Text of the Constitution via Law and Justice Commission
- Full Text and Case Law via Zain Sheikh & Associates
- Urdu text via National Assembly
- Laws & Order, 2002 (Updated Version) பரணிடப்பட்டது 2013-01-02 at the வந்தவழி இயந்திரம்