தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வரைவு, 2011
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011 (National Food Security Act 2011) நடுவண் அரசால் இந்தியக் குடியரசில் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்நேரமும் தாங்கள் செயல்படுவதற்கும் நலமாக வாழ்வதற்கும் உறுதி செய்கின்ற அளவிலான அளவிலும் தரத்திலும் போதுமான, பாதுகாப்பான உணவினை நேரடியாகவோ பணம் கொடுத்து வாங்கியோ பெறும் கட்டுமான, பொருளாதார மற்றும் சமூக அணுக்கத்தை உறுதி செய்கின்ற வகையில் வரைந்துள்ள ஓர் சட்ட முன்வரைவாகும். தேசிய ஆலோசனைக் குழுமத்தில் விவாதிக்கப்பட்டு 20 திசம்பர் 17,2011 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. [1]
இந்த சட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 63.5% மக்களுக்கு அரிசி அல்லது கோதுமையை சலுகை விலையில் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. இதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்திட்டங்களை தீட்டுவது குறித்தும், அவற்றை நிறைவேற்றுவது குறித்தும், நிறைவேற்றத் தவறுபவர்களை தண்டிப்பது குறித்தும் இந்த சட்ட முன்வரைவில் விவாதிக்கப்பட்டுள்ளன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தினமலர் செய்தி, பார்க்கப்பட்ட நாள்: 18 திசம்பர், 2011
- ↑ தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் - உண்மையில் பாதுகாப்பானதுதானா? கீற்று இணையத்தளம், நாள்:ஆகத்து 30,2010
வெளியிணைப்புகள்
தொகு- சட்ட முன்வரைவின் இறுதி வடிவம் பரணிடப்பட்டது 2012-01-03 at the வந்தவழி இயந்திரம்