தேசிய காட்டெருமை நாள்

ஆண்டு கொண்டாட்டம்

தேசிய காட்டெருமை நாள் (National Bison Day) என்பது அமெரிக்கக் காட்டெருமையின் முக்கியத்துவத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும். தேசிய காட்டெருமை நாளினை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து கூட்டாட்சி சட்டத்தை இயற்றுவதற்கான பிரச்சாரம் நடந்தது.[1] இதற்கானச் சட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஐக்கிய அமெரிக்க மூப்பவையில் 2013 முதல் இந்நாளைக் கொண்டாட அங்கீகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்கக் காட்டெருமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள இடங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தல், நிதியுதவி செய்தல் மற்றும் கலந்துகொள்வதுடன், பியர்ட்சு பார் காட்டெருமை பிரச்சாரம் தேசிய காட்டெருமை நாளினை கொத்துக்குறி மற்றும் தற்படம் மூலம் சமூக ஊடகங்களில் விவாதிக்க ஆதரவாளர்களை ஊக்குவித்தது.[2]

சட்டம் தொகு

பல ஆண்டுகளாக, காட்டெருமை ஆதரவாளர்கள் அமெரிக்கக் காட்டெருமைகளை "அமெரிக்காவின் தேசிய பாலூட்டியாக" மாற்ற "வோட் காட்டெருமை" பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் சனிக்கிழமையினை தேசிய காட்டெருமை நாளினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமீப ஆண்டுகளில் செனட்டர்கள் மைக் என்சி (ஆர்-டபிள்யூஒய்) மற்றும் ஜோ டோனெல்லி (டி-ஐஎன்) ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஐக்கிய அமெரிக்க மூப்பவை தனது ஒப்புதலைக் காட்டியது. மே 9, 2016 அன்று, அமெரிக்க அதிபர் ஒபாமா தேசிய காட்டெருமை மரபுச் சட்டத்தில் கையெழுத்திட்டார். இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்கக் காட்டெருமையை அமெரிக்காவின் தேசிய பாலூட்டியாக மாற்றியது.

மேற்கோள்கள் தொகு

  1. "Vote Bison: Elect Our National Mammal!". VoteBison.org. Vote Bison Coalition. 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.
  2. "Happy National Bison Day!". National Bison Association. 7 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_காட்டெருமை_நாள்&oldid=3620379" இலிருந்து மீள்விக்கப்பட்டது