தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பு

தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பு (National Socialist Underground, இடாய்ச்சு மொழி: Nationalsozialistischer Untergrund, NSU) என்பது செருமனியில் இயங்கும் ஒரு வலதுசாரி தீவிரவாத அமைப்பு ஆகும். இவ்வமைப்பு இயங்குவது நவம்பர் 2011 இலேயே வெளியில் தெரியவந்தது.[1] இதுவரை பெறப்பட்ட தகவல்களின் படி, இவ்வமைப்பில் ஊவே முண்டுலொசு, ஊவே போய்ன்கார்ட், பெயாட்டே ஷெய்ப்பே ஆகிய மூவரும் உறுப்பினர்களாக உள்ளது தெரிய வந்துள்ளது. இன்னும் எத்தனை பேர் இவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்கிறார்கள் என்பதோ, ஆதரவளிக்கிறார்கள் என்பதோ இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கப் படவில்லை.[2]

செருமனியின் சுவிக்காவு நகரில் தேசிய சோசலிச திரைமறைவு இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட ஓர் எரியூட்டப்பட்ட இல்லம்

தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பு மேற்கொண்ட தொடர் படுகொலைகளாக 1999இல் நூய்ர்ண்பேர்க்கில் இடம்பெற்ற வெடிகுண்டுத்தாக்குதல், 1999 இல் சார்புரூய்க்கனில் இராணுவக்கண்காட்சியில் இடம்பெற்ற தாக்குதல், 2000இல் டுசுல்டோர்ப் நகரில் நகர்ப்புற புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற வெடிகுண்டுத்தாக்குதல், 2001 இல் கோல்ன் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டுத்தாக்குதல், 2004 இல் கோல்ன் நகரில் இடம்பெற்ற ஆணிக்குண்டுத்தாக்குதல், 2007 இல் கைல்புறோணில் இடம்பெற்ற பெண்காவல்துறைஅதிகாரியின் படுகொலை என்பன கருதப்படுகின்றன.[3][4][5][6] இதையிட்ட விசாரணைகளும், புலனாய்வுகளும் தற்பொழுது செருமனியில் தொடர்வழக்குகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊவே முண்டுலொசு, ஊவே போய்ன்கார்ட் இருவரும் இறந்து விட்டார்கள். இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப் படுகிறது. பெயாட்டே ஷெய்ப்பே இன்னும் விசாரணைக் கைதியாக உள்ளார்.

தாக்குதல்கள்/கொலைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Daniel Koehler: The German National Socialist Underground (NSU), in Jackson, Paul and Shekhovtsov, Anton (editors): The Post-War Anglo-American Far Right: A Special Relationship of Hate. Palgrave Macmillan, 2014. pp. 122-141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137396211
  2. Netzwerk des NSU war größer als angenommen - zeit.de, மார்ச் 24, März 2013
  3. Trail of Hate – Activities and crimes of the Zwickau cell graphical timeline by Der Spiegel
  4. "Haftbefehl gegen Holger G. aus Niedersachen erlassen". Hamburger Abendblatt (in இடாய்ச்சு). 14 நவம்பர் 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. How could German neo-Nazi killers have evaded police for 13 years? தி கார்டியன்
  6. Friedrich spricht erstmals von "Rechtsterrorismus"