தேசிய தொழினுட்பக் கழகச் சட்டம், 2007
தேசிய தொழினுட்பக் கழகம் , அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் 2007 (The National Institutes of Technology, Science Education and Research Act, 2007) என்பது 2007 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். பின் சூன் 5, 2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 2007, இந்தியாவின் விடுதலை நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.[1] தொழினுட்பக் கல்வி தொடர்பான இரண்டாவது சட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக இந்திய தொழினுட்பக் கழகச் சட்டம் 1961 எனும் சட்டம் இயற்றப்பட்டது.
அடிப்படைக் கோட்பாடு
தொகுதமிழகத்தின் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் 17 பொறியியல் கல்லூரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிறுவியது. மேலும் பாட்னா, ரய்பூர் மற்றும் அகர்தலா ஆகிய நகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளை தேசிய தொழினுட்பக் கல்லூரிகளாக அடுத்த சில ஆண்டுகளில் மாற்றவும் 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் கருதியது.
சட்டத் திருத்தம்
தொகுதேசிய தொழினுட்பக் கழகம் , அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் 2016 (சட்டத் திருத்தம்) ஆனது மக்களவையில் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் இந்த மசோதாவை கொண்டுவந்தார். சூலை 19, 2016 இல் இந்தச் சட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய தொழினுட்பக் கழகம் நிறுவப்பட்டது.[2] சூலை 21, 2016 இல் மக்களவையிலும் ஆகஸ்டு 1, 2016 இல் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.[3]
சான்றுகள்
தொகு- ↑ "The National Institutes of Technology, Science Education and Research Act, 2007|Legislative Department | Ministry of Law and Justice | GoI". legislative.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
- ↑ "Bill introduced in Lok Sabha to bring 6 new IITs, ISM under IIT Act", The Economic Times, 19 July 2016
- ↑ "Parliament passes bill for setting up NIT in Andhra", Business Standard, 1 August 2016
வெளியிணைப்புகள்
தொகுதேசிய தொழினுட்பக்கழகச் சட்டம் 2007 - click here