தேசிய நெடுஞ்சாலை 1 (கம்போடியா)

கம்போடியாவில் உள்ள சாலை

கம்போடியாவின் தேசிய நெடுஞ்சாலை 1 (National Highway 1) என்பது 167.10 கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்கும் ஒரு சாலையாகும். இச்சாலை தேசிய சாலை 1 (10001) என்றும் அழைக்கப்படுகிறது. இச்சாலை தலைநகரம் புனோம் பென்னை பாவெட், சிவாய் ரீயெங் மாகாணம் வழியாக வியட்நாம் எல்லையுடன் இணைக்கிறது.[1]

புனோம் பென் நகரில் மோனிவாங் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை #1 கியென் சிவாய் மாவட்டம், கந்தால் மாகாணம், கம்போடியா

போர் காலத்தில் பழுதடைந்திருந்த தேசிய நெடுஞ்சாலை 1 ஐ, புதியதாகச் செப்பனிட்டு போக்குவரத்துக்காக கம்போடியா 1981 ஆம் ஆண்டில் திறந்தது. புனோம் பென்னில் மோனிவாங் பாலத்திற்கு அருகில் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 2 உடன் குவிந்து இணைகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. "Cambodian national road network". Archived from the original on 2006-08-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.

புற இணைப்புகள்

தொகு