தேசிய பிரெய்லி நூலகம்

நேபாளத்தில் பார்வையற்றோக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகம்

தேசிய பிரெய்லி நூலகம் (National Braille Library) நேபாளத்தில் பார்வையற்றோருக்காக அமைந்துள்ள முதல் மற்றும் ஒரே நூலகம் ஆகும். காட்மாண்டுவில் உள்ள திரிபுரேசுவோரில் கட்டப்பட்டுள்ள நேபாள பார்வையற்றோர் நலனுக்கான சங்கத்தின் கட்டிடத்தில் உள்ள கிராம அபிவிருத்தி குழுவான திரிபுரேசுவோரில் இந்த நூலகம் உள்ளது. 2009 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் நாள் தேசிய பிரெய்லி நூலகம் நிறுவப்பட்டது.[2] நிர்மலா கியாவாலி என்ற பார்வையற்றவர் ஒருவரால் நூலகம் திறக்கப்பட்டது.[3] நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஆங்கில மொழியில் உள்ளன.[1][4] மாதத்திற்கு 15-20 பார்வையாளர்கள் நூலகத்திற்கு வருகை தருகின்றனர்.[3]

தேசிய பிரெய்லி நூலகம்
National Braille Library
राष्ट्रिय ब्रेल पुस्तकालय
நாடுநேபாளம்
தொடக்கம்2009 (2009)
அமைவிடம்திரிபுரேசுவோர், காட்மாண்டு
அமைவிடம்27°41′28″N 85°18′59″E / 27.6911379831668°N 85.31639586293527°E / 27.6911379831668; 85.31639586293527
Collection
அளவு25,000 புத்தகங்கள்[1]
Map
Map

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Country's only library for visually impaired has no visitors". பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
  2. "2609 Mahavir- Nepali Times". பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
  3. 3.0 3.1 "M&S Vmag-How Nirmala Gyawali built the National Braille Library--brick by brick A Complete Video Magazine". பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
  4. "A (non) inclusive state – South Asians for Human Rights". பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_பிரெய்லி_நூலகம்&oldid=3433513" இலிருந்து மீள்விக்கப்பட்டது