தேசிய விழிப்புணர்வு அருங்காட்சியகம், ஜகார்த்தா
தேசிய விழிப்புணர்வு அருங்காட்சியகம் (Museum of National Aweakening) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு வரலாற்று அருங்காட்சியகம் ஆகும். தேசிய விழிப்புணர்வு அருங்காட்சியகம் தேசிய விழிப்புணர்வு தொடர்பான வரலாற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Museum Kebangkitan Nasional | |
நிறுவப்பட்டது | மே 8, 1999 |
---|---|
அமைவிடம் | ஜேஎல். அப்துல் ரச்மான் சாலேக் 26 ஜகார்த்தா 10410, இந்தோனேசியா |
ஆள்கூற்று | 6°10′43″S 106°50′17″E / 6.178718°S 106.838034°E |
வகை | வரலாற்று அருங்காட்சியகம் |
சேகரிப்பு அளவு | 2,042 கலைப்பொருள்கள் |
வருனர்களின் எண்ணிக்கை | வருடத்திற்கு சராசரியாக 15,000 பார்வையாளர்கள் |
இயக்குனர் | முனைவர்கள் எட்டி.சுவார்டி, எம்.கம்[1] |
வலைத்தளம் | http://www.museumkebangkitannasional.go.id |
வரலாறு
தொகுஇந்த அருங்காட்சியகத்தின் கட்டிடம் 1899 ஆம் ஆண்டு முதல் 1901 ஆண்டு வரை கட்டப்பட்டது. மார்ச் 1902 இல், ஸ்டோவியா என்ற பெயரில் இந்த கட்டிடம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஸ்டோவியா [2] என்பதற்கு உள்ளூர் மருத்துவர்களுக்கு பயிற்சி தரும் பள்ளி என்று பொருள் ஆகும்.ஜாவானியர்கள் மற்றும் பிற பூர்வீக மக்களுக்கான காலனித்துவ மருத்துவப் பள்ளியான 10 வருட படிப்புக் காலம் முடியும் வரை மாணவர்கள் தங்குமிடத்தில் வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.[3]
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆரம்பிக்கவே, 1920 ஆம் ஆண்டில், ஒரு புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன (தற்போது இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலம் என்ற நிலையில் இயங்கிவருகிறது). இந்த கட்டிடம் பின்னர் ஒரு முலோ பள்ளி ( ஜூனியர் உயர்நிலைப்பள்ளிக்கு சமமானது), ஏஎம்எஸ் ( மூத்த உயர்நிலைப்பள்ளிக்கு சமமானது) மற்றும் மருந்தாளுநர் உதவியாளர்களுக்கான பள்ளியாக பயன்படுத்தப்பட்டது.
ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, ஜப்பானியர்களால் டச்சு போர் கைதிகளை அடைத்து வைக்க இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த கட்டிடம் கே.என்.ஐ.எல் [4] மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகளாக பயன்படுத்தப்பட்டது.[3]
தேசிய விழிப்புணர்வு நாள்
தொகுமே 20, 1908 ஆம் நாளன்று பூடி உட்டோமோவின் பிறப்பு தொடர்பான கட்டிட உறவு காரணமாக, 1948 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விழிப்புணர்வு நாள் என்ற நிலையில் கருதப்பட்டு வர ஆரம்பித்ததால், இந்த கட்டிடம் ஜகார்த்தா அரசாங்கத்தால் ஏப்ரல் 1973 ஆம் நாளில் மீட்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்த கட்டிடம் மே 20, 1974 ஆம் நாளன்று அப்போது ஜனாதிபதியாக இருந்த சுஹார்டோ அவர்களால் அதிகாரப்பூர்வ புராதன நினைவுக் கட்டிடடமாக ஆக்கப்பட்டது. அப்போது அது கீடங் கெபாங்கிடான் நேசனல் ( "தேசிய விழிப்பு கட்டிடம்") என்ற பெயரில் [5] அழைக்கப்பட்டது. முந்தைய அந்தக் கட்டடத்தில் குடியிருந்தவர்கள் செங்கரேங் என்ற பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் இந்த கட்டிடம் நான்கு அருங்காட்சியகங்களாக உருவாக்கப்பட்டது. அவை புடி உட்டோமோ அருங்காட்சியகம், பெண்கள் அருங்காட்சியகம், பெர்ஸ் அருங்காட்சியகம் மற்றும் சுகாதார மற்றும் மருத்துவ அருங்காட்சியகம் என்பனவாகும். பிப்ரவரி 7, 1984 ஆம் நாளன்று, நான்கு அருங்காட்சியகங்கள் ஒன்றாக இணைந்து தேசிய விழிப்புணர்வு அருங்காட்சியகம் என்ற பெயருக்கு மாற்றப்பட்டன.
சேகரிப்புகள்
தொகுஇந்த கட்டிடத்தில் இந்தோனேசிய தேசிய விழிப்புணர்வு தொடர்பான 2,042 கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பள்ளி கட்டிடத்தின் அசல் தளவாடங்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ உடைகள், ஆயுதங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், டியோராமாக்கள், சிறிய வடிவில் அமைந்த கலைப்பொருள்கள், மற்றும் வரைபடங்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த அருங்காட்சியகம் நான்கு கருப்பொருள்களைக் கொண்ட கண்காட்சி அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை "ஆரம்பகால புரட்சியின் அறை", "தேசிய விழிப்புணர்வின் அறை", "புரட்சியின் அறை" மற்றும் "போடி ஓட்டோமோ நினைவு அறை" என்பனவாகும்.
பார்வை நேரம்
தொகுபார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தை வெள்ளிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பிற நாள்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்திற்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Pengantar - Museum Kebangkitan Nasional" (in Indonesian). Museum Kebangkitan Nasional. 2013. பார்க்கப்பட்ட நாள் February 15, 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ https://en.wikipedia.org/wiki/STOVIA STOVIA
- ↑ 3.0 3.1 "Sejarah Gedung Museum Kebangkitan Nasional" (in Indonesian). Museum Kebangkitan Nasional. 2013. Archived from the original on நவம்பர் 27, 2015. பார்க்கப்பட்ட நாள் February 15, 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ https://en.wikipedia.org/wiki/Royal_Netherlands_East_Indies_Army Royal Netherlands East Indies Army
- ↑ Egidius Patnistik (July 17, 2008). "Menelusuri Jejak Boedi Oetomo di Museum Kebangkitan Nasional" (in Indonesian). KOMPAS. http://nasional.kompas.com/read/2008/07/17/10373471/Menelusuri.Jejak.Boedi.Oetomo.di.Museum.Kebangkitan.Nasional. பார்த்த நாள்: February 12, 2013.