தேனாண்டாள் முரளி

சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்

தேனாண்டாள் முரளி அல்லது நா. இராமசாமி என்பது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராவார்.[1] இவர் தமிழ்த் தயாரிப்பாளர் ராம நாராயணனின் மகனாவார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான ஹேமா ருக்குமணி இவரது மனைவியாவார்.

தேனாண்டாள் முரளி
மற்ற பெயர்கள்என். இராமசாமி
பணிதயாரிப்பாளர்
பெற்றோர்ராம நாராயணன், இராதா
வாழ்க்கைத்
துணை
ஹேமா ருக்குமணி
வலைத்தளம்
டுவிட்டரில் தேனாண்டாள் முரளி

திரைத்துறை

தொகு

இவரது தந்தை மறைவிற்குப் பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் 2010 முதல் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். அரண்மனை (திரைப்படம்) (2014), காஞ்சனா 2 (2015), டிமான்ட்டி காலனி (திரைப்படம்) (2015) மற்றும் மாயா (திரைப்படம்) (2015) போன்ற திகில் படங்களை வெளியிட்டுக் கவனம் பெற்றார்.[2] இவர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுத் தலைவரானார்.[1] அதன் பின்னர் மூன்றாண்டுகள் கழித்து 2023 இல் நடைபெற்ற இரண்டாம் தேர்தலிலும் வெற்றி பெற்று தலைவராக உள்ளார்.

வழக்கு

தொகு

பேட்ட திரைப்படத்தின் வெளிநாட்டு பதிப்புரிமை தருவதாகக் கூறி 15 கோடி மேசடி செய்ததாக இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனாண்டாள்_முரளி&oldid=3847820" இலிருந்து மீள்விக்கப்பட்டது