தேனூர், மதுரை
தேனூர் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் வடக்கில் உள்ள ஒரு கிராமம். இங்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமி எழுத்துகளுடன் கூடிய 7 தங்க கட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த தங்க கட்டிகளோடு ருத்திராட்ச மணிகளும் அதனை இணைக்கும் வட்ட பொட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த புதையல் பொருள்களை ஆய்வு செய்ததில் இந்த தங்க கட்டியில் போகுல் குன்றக்கோதஇ என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகிறது. போகுல் என்றால் பெரிய , நெடிய குன்றம் என்றும் பெருங்குன்றம், நெடுங்குன்றம் என்றும் பொருள்படும் வகையில் இந்த பெயல் எழுதபட்டிருக்கலாம். போகுல்குன்றம் என்ற ஊரை சேர்ந்த கோதை என்ற பெண் தங்ககட்டியின் உரிமையாளராக இருக்கக்கூடும். கோதை என்ற பெயர் கோதஇ என்று எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கடைசி எழுத்துக்கள் அளபெடையுடன் எழுதும் வழக்கம் இருந்துள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thenur gold treasure found four years ago is 2300 years' old, recent study reveals Times of India, Oct 9, 2013