தேபகுந்தா (Debakunda) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள மயூர்பஞ்சு மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குளமாகும். தேவ்குண்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இது சிம்லிபால் தேசிய பூங்காவின் ஒரு பகுதியுமாகும்.[1][2] அருகில் உள்ள ஓர் அருவியில் இருந்து பாய்ந்த தண்ணீர் இந்த குளத்தை உருவாக்கியுள்ளது. அம்பிகா மந்திரா என்றழைக்கப்படும் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இராச்குமார் பிரபுல்ல சந்திர பஞ்சா தியோ என்பவரால் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளரும், பிரிட்டிசு ஆட்சியின் போது ஒரு மன்னருமாக இவர் தேவகுண்டில் தங்கி இந்த இடத்தைப் பற்றி ஆய்வு செய்தார்.[3][4][5] தேபகுந்தா பார்மீலியாசியே பூஞ்சை வகையான இலைக்கன் கற்பாசி இனங்களின் தாயகமாகும்.[6][7]

தேபகுந்தா
Debakunda
தேவ்குண்டு
தேபகுந்தா அருவியும் குளமும்.
தேபகுந்தா அருவியும் குளமும்.
தேபகுந்தா Debakunda is located in ஒடிசா
தேபகுந்தா Debakunda
தேபகுந்தா
Debakunda
அமைவிடம்மயூர்பஞ்சு, ஒடிசா, இந்தியா
ஆள்கூறுகள்21°42′N 86°26′E / 21.70°N 86.44°E / 21.70; 86.44
பூர்வீக பெயர்ଦେବକୁଣ୍ଡ (ஒடியா)
Part ofசிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்

அமைவிடம்

தொகு

உதலா நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவிலும், பரிபடா நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், பாலேசுவர் தொடருந்து நிலையத்திலிருந்து 66 கிமீ தொலைவிலும் தேபகுந்து குளம் அமைந்துள்ளது.[8]

பெயர்க்காரணம்

தொகு

தேபகுந்து என்பது இரண்டு ஒடிய சொற்களின் சேர்க்கையாகும். தேப என்ற சொல் தெய்வத்தையும் குந்தா என்ற சொல் ஒரு சிறிய குளம் அல்லது தொட்டி என்ற பொருளையும் குறிக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Jitāmitra Prasāda Siṃhadeba (1 January 2004). Tantric Hedonism of Mahanadi Valley: Uddiyana Pitha. D. K. Print World (P) Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-246-0269-0.
  2. Jitāmitra Prasāda Siṃhadeba (1 January 2003). Some tantric esotericism of Orissa. R.N. Bhattacharya. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87661-30-6.
  3. Prafulla Chandra Bhanja Deo; Jitāmitra Prasāda Siṃhadeba (2007). A Tantric Scholar, and the British Wrath on Bastar State: Historical Documentation Relating to Rajkumar Prafulla Chandra Bhanja Deo, and Swami Nigamananda Saraswati. Punthi Pustak. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86791-66-0.
  4. The Orissa Historical Research Journal. Superintendent of Research and Museum. 1998.
  5. Jitāmitra Prasāda Siṃhadeba (2006). Archaeology of Orissa: with special reference to Nuapada and Kalahandi. R.N. Bhattacharya. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87661-50-4.
  6. P. K. Divakar; Sarat Misra; D. K. Upreti (2004). Parmelioid lichens in India: a revisionary study. Bishen Singh Mahendra Pal Singh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-211-0389-3.
  7. Otv, News Desk. "After nine long months, the doors of the Lord Jagannath Temple in Koraput Town re-opened for devotees on Wednesday". After nine long months, the doors of the Lord Jagannath Temple in Koraput Town re-opened for devotees on Wednesday. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  8. "A Taste Of Nature's Bounty At Devkund Waterfall". odishabytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-01. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபகுந்தா&oldid=3814348" இலிருந்து மீள்விக்கப்பட்டது