தேபாசிசு கோசுவாமி

இந்தியக் கணிதவியலாளர்

தேபாசிசு கோசுவாமி (Debashish Goswami) ஓர் இந்திய கணிதவியலாளர் ஆவார். கல்யாண் பிதான் சின்காவின் மேற்பார்வையின் கீழ் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2012 ஆம் ஆண்டில் கணித அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1]

தேபாசிசு கோசுவாமி
Debashish Goswami
தேசியம்இந்தியா
துறைபரிமாற்றமற்ற வடிவியல், குவாண்டம் குழுக்கள், குவாண்டம் நிகழ்தகவு
பணியிடங்கள்இந்தியப் புள்ளியியல் கழகம், கொல்கத்தா
கல்வி கற்ற இடங்கள்இந்தியப் புள்ளியியல் கழகம், கொல்கத்தா
ஆய்வு நெறியாளர்கல்யாண் பிதான் சின்கா
விருதுகள்சாந்தி சுவரூப் பட்நாகர் விருது

விருதுகள்

தொகு
  1. இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் இளம் அறிவியலாளர் பதக்கம்[2]
  2. 2006 ஆம் ஆண்டு கணிதத்திற்கான பி.எம்.பிர்லா அறிவியல் விருது[2]
  3. 2009 ஆம் ஆண்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து சுவர்ணசெயந்தி உறுப்பினர் தகுதி.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhatnagar Prize Awardees 2012" (PDF). CSIR, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
  2. 2.0 2.1 "Awards and Honours". Indian Statistical Institute, Kolkata. Archived from the original on 13 June 2011. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபாசிசு_கோசுவாமி&oldid=3298089" இலிருந்து மீள்விக்கப்பட்டது