தேமுது குன்றம்
சங்ககாலத் தமிழர் பொருள் தேடச் செல்லும்போது தேமுதுகுன்றத்தைத் தாண்டிச் செல்வர் என மாமூலனார் குறிப்பிடுகிறார்.
இந்தக் குன்றநாட்டு அரசன் கண்ணன் எழினி. இவன்மீது படையெடுக்கவேண்டும் என இவனது பகைவர் நினைத்தவுடனேயே இவன் தன் பகைவர்களைத் தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச்செய்தான்.[1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் மறம் மிகு தானைக் கண்ணன் எழினி தேமுதுகுன்றம் இறந்தனர் ஆயினும் நீடலர் – மாமூலனார் பாடல் அகநானூறு 197