தேயியா
தேயியா (theia) என்பது ஏறத்தாழ 4.533 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்[1]ஆதிகால சூரியக் குடும்பத்தில் இருந்தாகக் கருதப்படும் ஒரு கோள் ஆகும், உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி (giant impact) இந்த கோள் ஆதிகாலப் புவியுடன் மோதியுள்ளது. இது தோரயமாக செவ்வாய் கோளின் அளவுடையது; இந்த கோள் புவியை மேலோட்டமாகத்தான் மோதியது ஆனால் இது முழுவதும் மோதி இருந்தால் புவியைச் சிதைத்திருக்கும். தேயியா புவியை மோதிய போது உண்டான சிதைந்த பொருள்கள் இனைந்து தான் நிலா உருவானது. முதலில் இரண்டு நிலாக்கள்[2][3] உருவானதாகவும் பின் அவை இரண்டும் இனைந்து நாம் இப்போது பார்க்கும் நிலா உருவானது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.மேலும் சிலர் தேயியாவின் கருவப்பகுதி புவியின் கருவப்பகுதியுடன் இனைந்து விட்டதாக கருதுகிறார்கள் அதனால் தான் புவியின் கருவம் நம் எதிர்பார்த்ததை விட பெரியதாக இருப்பதாக கருதுகிறார்கள்.
பெயர்க்காரணம்
தொகுதேயியா என்பது கிரேக்க நிலவின் கடவுள் பெயர். தேயியா புவியின் மோதி நிலவு தோன்றியதாக கருத்து நிலவுவதால் அதற்கு இப்பெயர் வழங்கப்பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The Theia Hypothesis: New Evidence Emerges that Earth and Moon Were Once the Same". The Daily Galaxy. 2007-07-05. Archived from the original on 2008-02-20. பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.
- ↑ 2.0 2.1 "Earth used to have TWO moons... but one was destroyed in a giant lunar collision". Mail online (reliable source?). 2011-08-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.
- ↑ "Faceoff! The Moon's oddly different sides", Astronomy, August 2014, 44-49.