தேர்முட்டி மண்டபம்

தேர்முட்டி மண்டபம் என்பது இந்தியாவிலும், இலங்கையிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவான தேர்த் திருவிழாவின்போது தேரில் உற்சவரை ஏற்றவும் தேர் உலா முடிந்தபின் உற்சவரை இறக்கவும் கட்டப்பட்ட ஒரு மண்டபமாகும்.[1] இந்த மண்டபத்தின் தரைப்பகுதியானது ஏறக்குறைய தேரில் உற்சவரை வைக்கும் பீடத்துக்கு இணையான உயரம் கொண்டு இருக்கும். இந்த உயரமான இடத்தில் உற்சவரை தேரில் ஏற்றுவதற்கு முன்னும் இறக்கிய பின்னும் சற்று நேரம் வைத்திருப்பர் இந்த இடத்தில் நான்கு கால் மண்டபமோ அல்லது ஆறு கால் மண்டபமோ கட்டப்பட்டிருக்கும் மண்டபத்தின் மையத்தில் உற்சவரை வைக்க ஏதுவாக ஒரு மேடை அமைத்திருப்பர். இந்த தேர்முட்டி மண்டபத்துக்குச் செல்ல அகலமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். தேர்முட்டி மண்டபத்தில் இருந்து தேரில் உற்சவரை ஏற்ற மரத்தால் ஒரு தற்காலிகப் பாலத்தை அமைப்பர் தேரில் உற்சவரை அமர்த்தியபின் இந்த மரப்பாலத்தை அகற்றியபின் தேரோட்டம் நடக்கும். சில கோயில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்கள் இருக்கும் அந்தந்தத் தேர்களை நிறுத்திவைக்கும் இடத்தை ஒட்டி தனித்தனியாக தேர்முட்டி மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கும்.

கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் தேரும், தேர்முட்டி மண்டபமும்
தேருக்கும் தேர்முட்டி மண்டபத்துக்கும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மரப்பலகை பாலம்

மேற்கோள்கள்

தொகு
  1. "தேரோட்ட மகிமை : ஆணவத்தை அழித்த ஈசன்". தினகரன். Archived from the original on 2015-08-02. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்முட்டி_மண்டபம்&oldid=3732653" இலிருந்து மீள்விக்கப்பட்டது