தேலிநீலாபுரம் பறவைகள் புகலிடம்

ஆந்திராவில் உள்ள பரவைகள் புகலிடம்

தேலிநீலாபுரம் பறவைகள் புகலிடம் (Telineelapuram and Telukunchi Bird Sanctuaries) என்பது ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டத்திலுள்ள தெக்காலிக்கு அருகிலுள்ள கிராமமான தெலிநீலபுரத்தில் உள்ள ஒரு பறவைகள் புகலிடம் ஆகும். இங்கு பழுப்புக் கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது[1]. பேர்டுலைப் இன்டர்நேசனல் (BirdLife International) என்ற அமைப்பின் வரையறைப்படி முக்கியமான பறவைகள் பகுதியாக (IBA) இது அறிவிக்கப்பட்டுள்ளது[2]. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பறவைகள் சரணாலயத்திற்கு வந்த பறவைகளின் எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியபோது பறவைகளின் வலசைப்போதமுதன்முதலில் கவனிக்கப்பட்டது என்று ஆந்திரப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 3,000 ஆக குறைந்துள்ளது.[3]

தெக்கலி சிற்றோடை மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களான தெலிநீலாபுரம், இஜ்ஜுவரம், நௌபாடா போன்ற கிராமங்கள் ரஷ்யா, மலேசியா, அங்கேரி, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வரும் 113 வகையான பறவைகள் தவிர, சைபீரியாவில் இருந்து வரும் பறவைகளுக்கும் பருவகால புகலிடமாக மாறியுள்ளது.[4]

காலநிலை

தொகு

தேலிநீலாபுரம் பறவைகள் புகலிடத்தில், கோடையில் வெப்பநிலை 22°C முதல் 39°C வரையிலும், குளிர்காலத்தில் 15°C முதல் 26°C வரையிலும் இருக்கும்.[5]

போக்குவரத்து

தொகு

போக்குவரத்து தேலிநீலாபுரத்திற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் நௌபாடா தொடருந்து நிலையம் ஆகும். இது 3 கி. மீ. தொலைவில் உள்ளது. தெலிகுஞ்சி பறவைகள் சரணாலயத்தைப் பார்வையிடுவதற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் இச்சாபுரம் (IPM) ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Telineelapuram Bird sanctuary – a spot of the winged tourists in Andhra Pradesh". பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Important Bird Areas (IBAs) in India". பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Sumit Bhattacharjee (10 April 2006). "A 12,000 km flight from Siberia". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060420150741/http://www.hindu.com/2006/04/10/stories/2006041001702000.htm. பார்த்த நாள்: 1 July 2014. 
  4. "Eco Tourism | District Srikakulam, Government of Andhra Pradesh | India".
  5. "Forest Tourism | District Srikakulam, Government of Andhra Pradesh | India".