தேவதாஸ் காந்தி

மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்

தேவதாஸ் காந்தி (22 மே 1900 – 3 ஆகத்து 1957) என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார்.

தேவதாஸ் காந்தி
Devdas Gandhi in the 1920s.JPG
1920இல் தேவதாஸ் காந்தி
பிறப்புமே 22, 1900(1900-05-22)
தென்னாப்பிரிக்கா
இறப்பு3 ஆகத்து 1957(1957-08-03) (அகவை 57)
தேசியம்இந்தியன்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி[1][2]
பிள்ளைகள்
உறவினர்கள்

காந்தியுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இராஜாஜியின் மகளான இலட்சுமி என்பவருடன் தேவதாஸ் காதல்வயப்பட்டார். அப்பொழுது இலட்சுமியின் வயது பதினைந்து ஆகும். ஆனால் தேவதாசின் வயதோ இருபத்து எட்டு ஆகும். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்கு காத்திருக்குமாறு நிபந்தனை விதித்தனர். ஐந்தாண்டுகள் கழிந்தபின் 1933இல் இருவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் இராசமோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி பட்டாசார்ஜீ ஆகிய நான்கு குழந்தைகள் ஆவர்.[3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதாஸ்_காந்தி&oldid=2717555" இருந்து மீள்விக்கப்பட்டது