சி. ஆர். நரசிம்மன்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரி நரசிம்மன் (Chakravarthi Rajagopalachari Narasimhan) (1909–1989) இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இந்திய மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1962 முடிய பணியாற்றியவர். இவர் ராஜாஜியின் ஒரே மகன் ஆவார். இவரது சகோதரி இலக்குமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர்.

சி. ஆர். நரசிம்மன்
மக்களவை உறுப்பினர், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி
பதவியில்
1952–1962
பிரதமர் ஜவஹர்லால் நேரு
தனிநபர் தகவல்
பிறப்பு 1909
இறப்பு 1989
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
தொழில் அரசியல்வாதி

இளமை தொகு

தமிழக மக்களால் இராஜாஜி என அழைப்படும் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியர்அலமேலு மங்கம்மா இணையருக்கு 1909-இல் பிறந்தவர் சி. ஆர். நரசிம்மன். 1930-ஆம் ஆண்டில் நரசிம்மன் தனது தந்தை இராஜாஜியுடன் சேர்ந்து, வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

அரசியல் தொகு

இந்திய விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற 1951-1952 முதல் இந்தியப் பொதுத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1] மீண்டும் 1957-இல் நடைபெற்ற இரண்டாவது இந்தியப் பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மீண்டும் வெற்றி பெற்றார்.[2][3] அதற்கடுத்து 1962ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கே. இராசாராமிடம் தோற்றுப்போனார்.

இராஜாஜி இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறி சுதந்திராக் கட்சியை நிறுவிய போது, சி. ஆர். நரசிம்மன் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தார். பின்னர் 1960-இல் நரசிம்மன் சுதந்திராக் கட்சியில் இணைந்தார்.

மறைவு தொகு

சி. ஆர். நரசிம்மன் 1989-இல் தமது 80-வது வயதில் மறைந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._நரசிம்மன்&oldid=3586904" இருந்து மீள்விக்கப்பட்டது