தேவனாம்பாளையம் அமணீசுவரர் கோயில்

தேவனாம்பாளையம் அமணீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேவனாம்பாளையம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னர் இவ்வூர் தேவ நகர் என்றழைக்கப்பட்டது.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் மூலவராக அமணீசுவரர் உள்ளார். இறைவி அறம்வளர்த்த நாயகி ஆவார். வில்வம், நொச்சி ஆகியவை கோயிலின் தல மரங்களாகும். கோயிலின் தல தீர்த்தமாக கற்பக நதி உள்ளது. சிவராத்திரி, கார்த்திகை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]

அமைப்பு

தொகு

கற்பக ஆற்றுக்கு நடுவில் பாறையின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஆற்றில் நீர் காணப்படும் நேரங்களில் கோயிலுக்குச் செல்வது சற்று சிரமமாகும். திருச்சுற்றில் நந்தி, அஷ்ட தேவதைகள், விநாயகர், முருகன் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ருத்ர தாண்டவர் உள்ளார். அவர் தனது எட்டு கைகளிலும் ஆயுதங்களை ஏந்திய நிலையில் காணப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே கருவறையில் சுயம்புவாக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு