தேவன் கோவிந்தசாமி
தேவன் கோவிந்தசாமி (Deven Govindasami) இந்தியாவைச் சேர்ந்த பாரம் தூக்கும் விளையாட்டு வீரர் ஆவார். தேவன் என்ற பெயராலும் அறியப்படும் இவர் 1963 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியன்று பிறந்தார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இவர் 54 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.[1]
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 5 மே 1963 வேலூர், தமிழ்நாடு, இந்தியா |
விளையாட்டு | |
விளையாட்டு | பாரம் தூக்குதல் |
1985 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல் வெற்றியாளர் போட்டிகளில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 1984 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் 1987 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.[2] 1987 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Deven Govindasami Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
- ↑ "G. DEVAN" (PDF). sdat.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 26 November 2023.
- ↑ "LIST OF ARJUNA AWARDEES" (PDF). yas.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 November 2023.