தேவமைந்தன் (எழுத்தாளர்)

தேவமைந்தன் (பிறப்பு: மார்ச்சு 11, 1948) என்ற புனைபெயர் கொண்ட அ. பசுபதி ஒரு கவிஞர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழ்நாட்டிலுள்ள கோவையில் பிறந்தார். இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தன் 52-ஆம் அகவையில் விருப்ப ஓய்வு பெற்றார். 1968ஆம் ஆண்டு முதல் தேவமைந்தன் படைத்த கவிதைகள், ‘உங்கள் தெருவில் ஒரு பாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய் மனிதர்கள்‘(1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் வானொலி உரைகள் நிகழ்த்தி வருபவர். ‘செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகி வருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் தேவமைந்தன் ஆற்றிய உரை, பல வலைப்பதிவுகளில் பதிவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் கவிதைப் பக்கங்கள் பல வலையேடுகளில் வெளிவந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவமைந்தன்_(எழுத்தாளர்)&oldid=3448389" இலிருந்து மீள்விக்கப்பட்டது