தேவிலால் சமர்

இந்திய பொம்மலாட்டக் கலைஞர்

தேவிலால் சமர் (Devilal Samar) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூரில் இருக்கும் நாட்டுப்புற நாடக அருங்காட்சியகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராவார். பாரதிய லோக் கலா மண்டல் என்பது இவ்வருங்காட்சியகத்தின் பெயராகும். தேவிலால் சமர் 1912 ஆம் ஆண்டு பிறந்தார். சமரின் சிறந்த பணிக்காக அவருக்கு இந்திய அரசாங்கத்தின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இராசத்தானிய நாடகம் மற்றும் பொம்மலாட்டம் தொடர்பாக சமர் பல நூல்களை இந்தி மொழியில் எழுதியுள்ளார்.

தேவிலால் சமர்
Devi Lal Samar
தேசியம்இந்தியன்

பொம்மலாட்டம் கற்ற பள்ளி ஆசிரியராக இருந்த இவர் 1952 ஆம் ஆண்டில் பாரதிய லோக் கலா மண்டலம் என்ற அருங்காட்சியகத்தை அமைத்தார். 1954 ஆம் ஆண்டு முதல் பொம்மலாட்ட்ட திருவிழாவையும் நடத்தத் தொடங்கினார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Antarmana". worldcat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிலால்_சமர்&oldid=3248135" இலிருந்து மீள்விக்கப்பட்டது