தேவேந்திர யாதவ்

தேவேந்திர சிங் யாதவ் (Devendra Yadav-பிறப்பு 1990) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதி மற்றும் 2018 முதல் சத்தீசுகர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பிலாய் நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2023 தேர்தலில், நகர்ப்புறங்களில் காங்கிரசு படுதோல்வி அடைந்தபோதும், நகர்ப்புறத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்தார். இந்தியத் தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளராகவும் இருந்த யாதவ், 2016ஆம் ஆண்டில் பிலாய் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிலாயின் இளைய மாநகரத் தந்தையாகவும் இருந்தார்.

தேவேந்திர யாதவ்
சட்டமன்ற உறுப்பினர்-சதீசுகர் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 திசம்பர் 2018
முன்னையவர்பிரேம் பிரகாசு பாண்டே
தொகுதிபிலாய் நகர் சட்டமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1990 (வயது 34)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இளமையும் கல்வியும் தொகு

பிலாய் நகரைச் சேர்ந்தவர் யாதவ். இவர் தனது பள்ளிப்படிப்பை பிலாய் நாயர் சமாஜம், பிலாயில் படித்தார். தனது பள்ளிக் கல்விக்குப் பிறகு, வானூர்தி ஓட்டுநராகப் பயிற்சியைத் தொடர போபால் சென்றார். ஆனால் ருங்க்தா பொறியியல் கல்லூரியின் மாணவர் தலைவரின் அழைப்புக்குப் பிறகு மீண்டும் பிலாய் வந்து அரசியலில் நுழைந்தார்.[2]

அரசியல் தொகு

இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாவட்ட பிரிவின் தலைவராக யாதவ் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் 2016ஆம் ஆண்டில் சத்தீசுகர் மாநிலத் தலைவராகவும், என்எஸ்யுஐயின் தேசிய செயலாளராகவும் ஆனார். 2016ஆம் ஆண்டில், பிலாய் மாநகராட்சி மாநகரத் தந்தையாகவும் ஆனார், இந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 2018ஆம் ஆண்டில், பிலாய் நகரிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் 2023-இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Devendra Singh Yadav(Indian National Congress(INC)):Constituency- BHILAI NAGAR(DURG) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.
  2. "DY- about". devendrayadav.in. பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.
  3. Reporter, Business Standard (2023-12-10). "Candidates Detail: Devendra Yadav". www.business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-14. {{cite web}}: |first= has generic name (help)
  4. "Devendra Yadav Election Result 2023 LIVE: Bhilai Nagar Result Tally Updates". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_யாதவ்&oldid=3945077" இலிருந்து மீள்விக்கப்பட்டது