தைக்காடு தர்ம சாஸ்தா கோயில், திருவனந்தபுரம்

தைக்காடு தர்ம சாஸ்தா கோயில், இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் தைக்காடு என்னுமிடத்தில் அரசு மாதிரிப்பள்ளிக்கும் அரசு கலைக்கல்லூரிக்கும் அருகில் அமைந்துள்ளது. இந்தப் பழமையான இந்து கோயிலின் மூலவர் தர்ம சாஸ்தா (ஐயப்ப சுவாமி) ஆவார். [1]

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு 8 கி.மீ, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது. நாயர் சர்வீஸ் சொசைட்டியால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவர் ஐயப்ப சுவாமி எனப்படுகின்ற தர்ம சாஸ்தா ஆவார். தர்ம சாஸ்தா தென்னிந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் தெய்வமாக இருப்பினும் ஒப்பீட்டளவில் இந்தக் கோயில்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. மிகவும் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகின்றனர். தைக்காடு தர்ம சாஸ்தா கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலில் கணபதி, விஷ்ணு, சிவன், துர்க்காதேவி, அனுமன் சுவாமி, சுப்ரமணிய சுவாமி, நாகர், நவக்கிரகம் போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளன...

முக்கிய திருவிழாக்கள்

தொகு

மண்டல மகரவிளக்கு இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம், அஷ்டமி ரோகிணி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

காணிக்கை

தொகு

இக்கோயில் காணிக்கை மற்றும் வழிபாட்டில் கணபதி ஹோமம், அர்ச்சனை, முழுக்காப்பு.புஷ்பாஞ்சலி, அரவணை பாயசம், பஞ்சாமிர்தம், பால்பாயாசம் ஆகியவை அடங்கும். இந்த கோவிலின் நீரஜனம் ஒரு முக்கிய பிரசாதமாகும். அனைத்து சனிக்கிழமைகளிலும் இதனைப் பெற அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் இங்கு 'நவக்கிரக பூஜை' செய்கின்றனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு