தைட்டனோகோல்டைட்டு
தைட்டனோகோல்டைட்டு (Titanoholtite) என்பது (Ti0.75[]0.25)Al6BSi3O18 என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய இக்கனிமம் மிகப்பெரிய துமார்ட்டியரைட்டு தொகுதியில் தைட்டானியம் மிகுந்த உறுப்பினர் மற்றும் ஒல்டைட்டு தொகுதியின் தைட்டானியம் கனிமத்தையொத்த ஓல்டைட்டு என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இக்குழுவில் மிகச் சமீபத்தில் கண்டறியப்பட்ட மூன்று கனிமங்களில் இதுவும் ஒன்றாகும். நையோபோகோலைட்டும் சுசிக்லேரையைட்டும் மற்ற இரு கனிமங்களாகும். போலந்து நாட்டின் சாப்கோவைசு சிலாசுகியில் உள்ள சுசிக்லேரை கிராமத்தில் இவை மூன்றும் கிடைத்தன [1] [3]. குறிப்பாக தனித்த வகை தீப்பாறைகளில் இவை கிடைத்தன.
தைட்டனோகோல்டைட்டு Titanoholtite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Ti0.75[]0.25)Al6BSi3O18 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியம் சங்கம் தைட்டனோகோல்டைட்டு கனிமத்தை Thlt[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
ஓலைட்டு மற்றும் நையோபோகோல்டைட்டுடன் பெரும்பாலும் கலந்து காணப்படும். இவை தவிர சுசிகிளாரட்டுடன் கலந்துள்ள மற்ற பல எண்ணிக்கையிலான கனிமங்களுடன் தைட்டனோகோல்டைட்டு கனிமம் கலந்துள்ளது.
ஆன்டிமனியும் ஆர்சனிக்கும் முக்கியமான மாசுக்களாக அதிக அளவில் இதில் கலந்துள்ளன. அலுமினியம், இரும்பு, டாண்ட்டலம், தைட்டானியம், பாசுபரசு மற்றும் ஐதராக்சில் குழுக்கள் குறைந்த அளவில் கலந்துள்ளன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Pieczka, A.; Evans, R. J.; Grew, E. S.; Groat, L. A.; Ma, C.; Rossman, G. R. (2013). "The dumortierite supergroup. II. Three new minerals from the Szklary pegmatite, SW Poland: Nioboholtite, (Nb0.6〈0.4)Al6BSi3O18, titanoholtite, (Ti0.75〈0.25)Al6BSi3O18, and szklaryite, 〈Al6BAs3+3O15". Mineralogical Magazine 77 (6): 2841. doi:10.1180/minmag.2013.077.6.10. Bibcode: 2013MinM...77.2841P. https://authors.library.caltech.edu/41877/.
- ↑ "Titanoholtite: Titanoholtite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
- ↑ "Schiavinatoite: Schiavinatoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.