தைட்டனோசென் டைகார்பனைல்
தைட்டனோசென் டைகார்பனைல் (Titanocene dicarbonyl) என்பது (η5-C5H5)2Ti(CO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமதைட்டானியம் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை Cp2Ti(CO)2 என்ற சுருக்கக் குறியீட்டால் குறிப்பிடுவார்கள். ஐயுபிஏசி முறையில் இதை டைகார்பனைல்பிசு(சைக்ளோபெண்டாடையீனைல்)தைட்டானியம் என்ற பெயரால் அழைப்பர். இந்த மெட்டலோசென் வகைச் சேர்மம் அடர்த்தியான அரக்கு நிறத்தில் காற்று உணரி திண்மமாகக் காணப்படுகிறது. அலிபாட்டிக் மற்றும் அரோமாட்டிக் கரிம கரைப்பான்களில் கரைகிறது[1] . சல்பாக்சைடுகளில் ஆக்சிசன் நீக்கியாகவும், அரோமாட்டிக் ஆல்டிகைடுகளையும் ஆல்டிகைடுகளயும் ஒடுக்கிப் பிணைக்கவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைகார்பனைல்பிசு(η5-சைக்ளோபெண்டாடையீனைல்)தைட்டானியம்(II)
| |
வேறு பெயர்கள்
டைகார்பனைல்டை-π-சைக்ளோபெண்டாடையீனைல்தைட்டானியம்
| |
இனங்காட்டிகள் | |
12129-51-0 | |
பண்புகள் | |
C12H10O2Ti | |
வாய்ப்பாட்டு எடை | 234.09 கி/மோல் |
தோற்றம் | அரக்கு நிறத் திண்மம் |
உருகுநிலை | 90 °C (194 °F; 363 K) |
கொதிநிலை | பதங்கமாதல் 40 முதல் 80 °C (104 முதல் 176 °F; 313 முதல் 353 K) 0.001 மி.மீ பாதரசத்தில் |
கரையாது | |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | THF, பென்சீன் |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தைட்டனோசென் டைகுளோரைடுடன் மக்னீசியம் உலோகத்தை கார்பனோராக்சைடு வாயுச் சூழலில் வினைபுரியச் செய்து ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் Cp2Ti(CO)2 சேர்மத்தைத் தயாரிக்கலாம்[2].
- (C5H5)2TiCl2 + Mg + 2 CO → (C5H5)2Ti(CO)2 + MgCl2
Cp2Ti(CO)2 மற்றும் Cp2TiCl2 இரண்டுமே சிர்க்கோனியம், ஆஃபினியம் சேர்மங்களுடன் தொடர்புடைய நான்முகிகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sikora, D. J.; Moriarty, K. J.; Rausch, M. D. (1990). "Reagents for Transition Metal complex and Organometallic syntheses". Inorganic Syntheses 28: 250–251.
- ↑ Sikora, D. J.; Moriarty, K. J.; Rausch, M. D. (1990). "Reagents for Transition Metal complex and Organometallic syntheses". Inorganic Syntheses 28: 250–251.