தையல் சிட்டு

தையல் சிட்டு
பொதுவான தையல்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே
பேரினம்:
ஆர்த்தோமசு

கோர்சூபீல்டு, 1821
சிற்றினங்கள்

உரையினை காண்க

தையல்சிட்டு (Tailorbird) என்பது ஆர்த்தோமசு பேரினத்தினைச் சேர்ந்த சிறிய வகைப் பறவைகள் ஆகும்.

விளக்கம்

தொகு

தையல்சிட்டுக்களில் பெரும்பாலானவை ஆர்த்தோமசு பேரினத்தைச் சேர்ந்தவை. இவை பழைய உலக கதிர்க்குருவி குடும்பமான சில்விடேயில் வைக்கப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆய்வுகள் சிசுடிகோலிடே குடும்பத்தினை சேர்ந்தவை இவை என வகைப்பாட்டியலாளர்கள் கோயோ மற்றும் பலரால் கருதப்படுகின்றன.[1] இப்பேரினத்தினைச் சேர்ந்த முன்னாள் சிற்றினம், மலை தையல்சிட்டு பழைய உலக கதிர்க்குருவி பேரினமான செடியாவுடன் நெருங்கிய தொடர்புடையது.[2]

தையல்சிட்டு பழைய உலக வெப்ப மண்டலப்பகுதியான, முக்கியமாக ஆசியாவில் காணப்படுகின்றது.

இந்த கதிர்க்குருவிகள் பொதுவாக பிரகாசமான நிறத்தில் காணப்படும். இவற்றின் மேற்பகுதிகள் பச்சை அல்லது சாம்பல் மற்றும் மஞ்சள் வெள்ளை அல்லது சாம்பல் நிற்த்தில் இருக்கும். இவை பெரும்பாலும் தலைப்பகுதி கசுகொட்டை நிறத்திலிருக்கும்.

தையல்சிட்டுகள் குறுகிய வட்டமான இறக்கைகள், குறுகிய வால்கள், வலுவான கால்கள் மற்றும் நீண்ட வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன. வால் பொதுவாக ஒரு விரென் பறவைகளுக்கு உள்ளது போல நிமிர்ந்து காணப்படும். இவை பொதுவாக திறந்த வனப்பகுதி, புதர் மற்றும் தோட்டங்களில் காணப்படுகின்றன.

தையல்சிட்டு என்னும் பெயர் கூடுகட்டும் விதத்தினைக் கொண்டு அமைந்த காரணப் பெயராகும். பெரிய இலைகளின் ஓரங்களை துளையிட்டு தாரவ நார் மற்றும் சிலந்திகளின் கூட்டை பயன்படுத்தி தையல்சிட்டு தன் கூட்டை தைத்து அமைக்கிறது.

சிற்றினங்கள்

தொகு

ஆர்த்தோமசு எனப்படும் தையல்சிட்டு பேரினத்தில் 13 சிற்றினங்கள் உள்ளன.

படம் பொதுப்பெயர் விலங்கியல் பெயர் காணப்படும் இடங்கள்
  பொதுவான தையல்சிட்டு ஆர்த்தோமசு சுடோரியசு சீனா, இலங்கை, தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா மற்றும் வியட்நாம்
  கருங்கழுத்து தையல்சிட்டு ஆர்த்தோமசு அட்ரோகுலரிசு வங்களாதேசம், வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா.
கம்போடிய தையல்சிட்டு ஆர்த்தோமசு சக்டோமுக்[3] கம்போடியா
பிலிப்பீண்டு தையல்சிட்டு ஆர்த்தோமசு castaneiceps பிலிப்பீன்சு
டிரில்லிங் தையல்சிட்டு ஆர்த்தோமசு குளோரோனோடசு பிலிப்பீன்சு
செம்பழுப்பு தையல்சிட்டு ஆர்த்தோமசு பிரண்டாலிசு கிழக்கு பிலிப்பீன்சு
சாம்பல் முதுகில் தையல் பறவை ஆர்த்தோமசு டெர்பியசு பிலிப்பீன்சு (பலவான், லூசன் மற்றும் கேடன்டுவான்ஸ்)
  செம்பழுப்பு வால் தையல்சிட்டு ஆர்த்தோமசு செரிசியசு புருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து.
  சாம்பல் தையல் பறவை ஆர்த்தோமசு ருஃபிசெப்சு புருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து, வியட்நாம்.
  ஆலிவ் ஆதரவு தையல் பறவை

மஞ்சள் மார்பக தையல் பறவை கருப்பு தலை தையல் பறவை

ஆர்த்தோமசு செபியம் ஜாவா, மதுரா தீவு, பாலி மற்றும் லோம்போக்.
மஞ்சள் மார்பு தையல்சிட்டு ஆர்த்தோமசு சமரென்சிசு பிலிப்பீன்சு.
கருந்தலை தையல்சிட்டு ஆர்த்தோமசு நைகிரிசெப்சு பிலிப்பீன்சு (மின்டானோ, டினாகட் மற்றும் சியர்கோவ்.)
வெண்காது தையல்சிட்டு ஆர்த்தோமசு சினிரிசெப்சு பிலிப்பீன்சு (பசிலன் மற்றும் மேற்கு மிண்டனாவ்.)

இரண்டு சிற்றினங்கள் செட்டிடே குடும்பத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

  • மலை தையல்சிட்டு, பில்லர்கேட்சு குக்குலேடசு
  • பழுப்பு தலை தையல்சிட்டு, பில்லர்கேட்சு கெட்டோரோலிமசு

படங்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  1. Del Hoyo, J.; Elliot, A.; Christie D., eds. (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions, Barcelona. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-42-2.
  2. Alström, Per; Ericson, P.G.P.; Olsson, U.; Sundberg, P. (2006). "Phylogeny and classification of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பப்மெட்:16054402. 
  3. Mahood, S. P. (2013). "A new species of lowland tailorbird (Passeriformes: Cisticolidae: Orthotomus ) from the Mekong floodplain of Cambodia". Forktail 29: 1–14. http://orientalbirdclub.org/wp-content/uploads/2013/06/TAILORBIRD_Forktail_29pp1-14.pdf. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தையல்_சிட்டு&oldid=3721734" இலிருந்து மீள்விக்கப்பட்டது