குருவி (வரிசை)

குருவி (passerine) என்ற சொல் Passeriformes என்ற வரிசையிலுள்ள எந்த ஒரு பறவையையும் குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த வரிசையின் கீழ்தான் வருகின்றன.[1] பறவையினத்தின் பிற வரிசைகளிலிருந்து குருவிகளானவை அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. குருவியின வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும், ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளந. இது மரக்கிளைகள் போன்றவற்றை இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது. குருவி வரிசைப் பறவைகள் மரக்கிளைகள் போன்றவற்றைப் பற்றிக்கொண்டு இருந்து, குயிலுபவை (பாடுபவை).

குருவிகள்
புதைப்படிவ காலம்:இயோசீன்-தற்காலம், 52.5–0 Ma
மேல் வலதுபுறமிருந்து கடிகாரச்சுற்றில்: பாலத்தீனிய தேன்சிட்டு (Cinnyris osea), நீல அழகி (Cyanocitta cristata), சிட்டுக்குருவி (Passer domesticus), சாம்பற் சிட்டு (Parus major), முக்காடு காகம் (Corvus cornix), தெற்கு முகமூடி வீவர் (Ploceus velatus)
ஊதா நிற முடிசூட்டப்பட்ட தேவதையின் (Malurus coronatus) பாட்டுச் சத்தம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
துணைவரிசைகள்
  • Acanthisitti
  • Tyranni
  • Passeri

மற்றும் பல

உயிரியற் பல்வகைமை
ஏறக்குறைய 140 குடும்பங்கள், 6,500 இனங்கள்

இந்த வரிசையில் 140க்கும் மேற்பட்ட குடும்பங்களும் அவற்றுள் ஏறத்தாழ ஏறத்தாழ 6,500 பறவையினங்களும் உள்ளன.[2] இவ்வாறாக குருவி வரிசை தான் பறவை வரிசைகளிலேயே மிகவும் பெரியதாகும். மேலும் நிலவாழ் முதுகெலும்பி வரிசைகளில் பல்வேறு வகைப்பட்ட உயிரினங்கள் இந்த வரிசையில் தான் உள்ளன. குருவி வரிசையானது மூன்று துணை வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3][4] இவ்வரிசையில் மற்ற பறவைகளின் கூட்டில் முட்டைகளை இடக்கூடிய பல குழுக்கள் உள்ளன.பெரும்பாலான குருவிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன. அதே நேரத்தில் கீச்சான்கள் ஊனுண்ணிகளாக உள்ளன.

முட்டைகளும் கூடுகளும்

தொகு

குருவிகளின் குஞ்சுகள் கண்பார்வையற்றும் சிறகுகளின்றியும் முட்டைகளிலிருந்து பொரித்துப் பிறக்கின்றன. இதன் காரணமாக அவற்றிற்கு தாய் தந்தைப்பறவைகளின் பாதுகாப்பு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பெரும்பாலான குருவி வரிசை உயிரினங்கள் நிறமுடைய முட்டைகளை இடுகின்றன. அதே நேரத்தில் குருவி வரிசை தவிர மற்ற வரிசைப் பறவைகள் பெரும்பாலும் வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன. ஆனால் நிலத்தில் கூடுகளை அமைக்கும் சரத்ரீபார்மசு போன்ற பறவைகளும் பக்கிகள் போன்ற பறவைகளும் வேறு நிறங்களில் முட்டைகளை இடுகின்றன. ஏனெனில் அவை மணல் நிறத்துடன் ஒத்த நிறத்தில் முட்டைகளை இடவேண்டி உள்ளது. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டைகளை இடும் சில குயில்களில் கூடுகட்டும் பறவைகளின் முட்டை நிறங்களை ஒத்திருக்க குயிலின் முட்டை நிறமானது வெள்ளை தவிர மற்ற நிறங்களில் உள்ளது.

குருவிகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையானது இனத்தைப் பொறுத்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது. ஆத்திரேலியாவின் சில பெரிய குருவிகள் ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. வெப்பமான சூழ்நிலைகளில் வாழக்கூடிய பெரும்பாலான சிறிய குருவிகள் 2 முதல் 5 முட்டைகள் வரை இடுகின்றன. புவியின் வட அரைக்கோளத்தில், வடக்குப் பகுதிகளில், பொந்துகளில் கூடுகட்டும் பட்டாணிக் குருவி போன்ற இனங்கள் 12 முட்டைகள் வரை இடக்கூடியவை. மற்ற இனங்கள் 5 அல்லது 6 முட்டைகளை இடுகின்றன.

உசாத்துணை

தொகு
  1. Mayr, Ernst (1946). "The Number of Species of Birds". The Auk 63 (1): 67. doi:10.2307/4079907. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v063n01/p0064-p0069.pdf. 
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Family Index". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
  3. Barker, F. Keith; Barrowclough, George F.; Groth, Jeff G. (2002). "A phylogenetic hypothesis for passerine birds: Taxonomic and biogeographic implications of an analysis of nuclear DNA sequence data". Proceedings of the Royal Society B: Biological Sciences 269 (1488): 295–308. doi:10.1098/rspb.2001.1883. பப்மெட்:11839199. 
  4. Ericson, P.G.; Christidis, L.; Cooper, A.; Irestedt, M.; Jackson, J.; Johansson, U.S.; Norman, J.A. (7 February 2002). "A Gondwanan origin of passerine birds supported by DNA sequences of the endemic New Zealand wrens". Proceedings of the Royal Society B 269 (1488): 235–241. doi:10.1098/rspb.2001.1877. பப்மெட்:11839192. 

வெளி இணைப்புகள்

தொகு
  •   பொதுவகத்தில் Passeriformes பற்றிய ஊடகங்கள்
  •   விக்கியினங்களில் Passeriformes பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவி_(வரிசை)&oldid=3929073" இலிருந்து மீள்விக்கப்பட்டது