தையல் வகைகள்

ஆடை தயாரிப்புக் கலையில் ஒரு தையல் கட்டு எனப்படுவது ஒருதடவை நூல் துணியில் அல்லது ஆதாரத்தில் முடிச்சு அல்லது வளையம் இடுவதாகும். இயந்திரத் தையல் ஆயினும் கைத் தையல் ஆயினும் தயல் கட்டு என்பது தையலின் அடிப்படை ஆகும்..[1] சிறப்புடைய பல்வேறுபட்ட தையல் முறைகள் வேறுபட்ட நோக்கங்களுக்ககப் பயன்படுத்தப்படுகின்றன.

கைத் தையல்.

தையலின் வகைகள்தொகு

தையல் ஊசி மூலம் இடப்படக் கூடிய இந்த தையல் வகைகள் அவை இடப்படும் ஊசிக் கண் அமைப்பில் மாறுபடும்:[1] அடிப்படையில் தையல் இரு வகைப்படும்.

  1. அடிப்படைத்தையல்: இது சோம் தையல்,விசுபம் தையல், சிறுநூலோடி, பெருநூலோடி, துன்னாத்தையல் முதலியவற்றை அடக்கும்.
  2. அலங்காரத்தையல்: இது சங்கிலித்தையல், நரம்புத்தையல், நிரப்புத் தையல், மீன் முள்ளுத் தையல், கம்பளித்தையல் ஆகியவற்றை அடக்கும்.

சோம் தையல்தொகு

 
சோம் தையல் முறை

பொருத்துக்களை இணைப்பதற்கான அடிப்படைத் தையலாக சோம் தையல் பயன்படும். லேசு வகைகளைப் பொருத்தவும், அலங்கார வேலைகளுக்கும் இது பயன்படும். ஆடைகளில் உள்ள பொத்தலை மறைஇஅவும் இது பயனுடையது.

சிறு நூலோடிதொகு

 
நூலோடி தையல் முறை

இது சிறு நூலோடி, பெரு நூலோடி என இரு வகைப்படும். இவை தற்காலிக தையல் தேவைகளுக்கான முறைகளாகும். சிமோக்கிங் தையலுக்கு சுருக்கி எடுக்கவும் பெரு நூலோடி மடிப்புக் குலையாமல் இருத்தல் முதலான தையல்களுக்கும் பெரிதும் பயன்படும்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Picken (1957), p. 322
"https://ta.wikipedia.org/w/index.php?title=தையல்_வகைகள்&oldid=1431533" இருந்து மீள்விக்கப்பட்டது