தைவான் வயல் சுண்டெலி
தைவான் வயல் சுண்டெலி அல்லது பார்மோசன் மர சுண்டெலி ( அப்போடெமசு செமோட்டசு) என்றும் அழைக்கப்படும் எலியானது, முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி ஆகும். இது தைவானில் மட்டுமே காணப்படுகிறது.[1]
தைவான் வயல் சுண்டெலி
Taiwan field mouse | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணிகள் |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | முறிடே |
பேரினம்: | அப்போடெமசு |
சிற்றினம்: | அ. செமோட்டசு |
இருசொற் பெயரீடு | |
அப்போடெமசு செமோட்டசு தாமசு, 1908 |
தைவான் வயல் எலி முதன்மையாக மொன்டேன் பகுதியில் 1,400 முதல் 3,000 மீ உயர நிலப்பரப்பில் காணப்படுகிறது.[2] இவை இயற்கை அல்லது செயற்கை காடுகள், புல்வெளிகள், பண்ணைகள் மற்றும் முகாம் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தாவரங்கள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளை உணவாக உண்ணுகின்றன.[3]
உருவ அளவீடுகளின் அடிப்படையில், தைவான் வயல் சுண்டெலிகள் தென்சீன வயல் சுண்டெலியிலிருந்து (அப்போடெமசு டிராகோ) வேறுபட்டதல்ல என்றும், இதனை ஒரு தனி இனமாகக் கருதக்கூடாது என்றும் கூறப்படுகிறது. [4]
தைவான் வயல் சுண்டெலியில் ஆண் பெண் உருவ வேறுபாடு கொண்டது. ஆண் பொதுவாகப் பெண்களை விட பெரியது (ஆண்: 25.6 ± 0.5 கிராம்; பெண்: 23.8 ± 0.5 கிராம் எடையுடையது [5] ). அடையாளமிட்டு-பிடிப்பு-மீளப்பெறுதல் தரவுகளின் அடிப்படையில் இதனுடைய ஆயுட்காலம் காடுகளில் 1 வருடத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Smith, A.T. (2016). "Apodemus semotus". IUCN Red List of Threatened Species. 2016. Retrieved 16 September 2016.
- ↑ Yu, H. T. (1994). "Distribution and abundance of small mammals along a subtropical elevational gradient in central Taiwan". Journal of Zoology 234 (4): 577–600. doi:10.1111/j.1469-7998.1994.tb04866.x. https://archive.org/details/sim_journal-of-zoology_1994-12_234_4/page/577.
- ↑ Lin, L. K.; Shiraishi, S. (1992). "Demography of the Formosan wood mouse Apodemus semotus". Journal of the Faculty of Agriculture, Kyushu University 36: 245–266.
- ↑ Kaneko, Y. (2011). "Taxonomic status of Apodemus semotus in Taiwan by morphometrical comparison with A. draco, A. peninsulae and A. latronum in China, Korea and Myanmar". Mammal Study 36: 11–22. doi:10.3106/041.036.0102.
- ↑ Lin, J. W.; Lo, H. Y.; Wang, H. C.; Shaner, P. J. L. (2014). "The effects of mite parasitism on the reproduction and survival of the Taiwan field mice (Apodemus semotus)". Zoological Studies 53: 79. doi:10.1186/s40555-014-0079-2.
- ↑ Shaner, P. L.; Wu, S. H.; Ke, L.; Kao, S. J. (2013). "Trophic divergence reduces survival in an omnivorous rodent". Evolutionary Ecology Research 15: 1–14.