தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம்

தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம் (Taiwan Banana Research Institute- TBRI) ) வாழைப்பழங்களை இனப்பெருக்கம் செய்வதிலும், அவற்றின் சாகுபடி மற்றும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் நிபுணத்துவம் பெற்றது. வாழைப்பழங்கள் தைவானின் மிக முக்கியமான ஏற்றுமதி பழமாகும்.

தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம்
Taiwan Banana Research Institute
財團法人台灣香蕉研究所
Established1970
Chairmanகிசிச்-மிம்-சூ
இயக்குநர்குவாங் சின் - சூஆன்
Locationபிங்துங் நாடு, தைவான்
Websitewww.banana.org.tw

வரலாறு

தொகு

பனாமா நோயால் தைவானின் வாழைத் தொழிலில் 1967இல் ஏற்பட்ட பேரழிவிற்குத் தீர்வுகாணும் நோக்கத்தில் 1970ஆம் ஆண்டு தைவான் வாழைப்பழ ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. தைவான் வாழைப் பழ தர மேம்பாட்டுச் சங்கம், தைவான் மாகாண பழ மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டுறவு மற்றும் கிராமப்புற புனரமைப்புக்கான கூட்டு ஆணையம் இந்நிறுவனம் தோன்றப் பங்களிப்புச் செய்தவர்களாவர்[1]

டிஆர் 4 க்கு பதிலாக, இந்நிறுவனம் மில்லியன் கணக்கான திசு வளர்ப்பு வாழை செடிகளை வளர்த்தது. இது டிஆர் 4க்கு எதிர்ப்பை மேம்படுத்தும் நன்மை பயக்கும் பிறழ்வுகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையினைத் தந்தது.[2] இதிலிருந்து இரண்டு பெரும் கேவென்டிஷ் திசு வளர்ப்பு வகை ஜி.சி.டி.சி.வி 218 மற்றும் ஜி.சி.டி.சி.வி 219 தோற்றுவிக்கப்பட்டது. இவை டி.ஆர் 4க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியினை கொண்டுள்ளது.[3]

தோற்றுவிக்கப்பட்ட வகைகள்

தொகு

ஃபார்மோசனா

தொகு

பார்மோசனா பனாமா நோயான டிஆர் 4க்கு எதிர்த்து வளரக்கூடியது.[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Taiwan Banana Research Institute" (PDF). www.banana.org.tw. TBRI. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.
  2. Fleming, Nic. "Science's search for a super banana". www.theguardian.com. The Guardian. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.
  3. Amelinckx, Andrew. "Researcher Says the Impending Death of the World's Favorite Banana Has Been Greatly Exaggerated". modernfarmer.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.
  4. "South African Company Strikes Deal to Grow TR4-resistant Banana Varieties". www.freshfruitportal.com. Fresh Fruit Portal. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.