தைவான் சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம்

தைவான் சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம் (Taiwan Sugar Research Institute)(TSRI; மரபுவழிச் சீனம்: 台糖研究所பின்யின்: Táitáng Yánjiūsuǒ) என்பது தைவானின் சர்க்கரை கூட்டுத்தாபனத்தின் சர்க்கரை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனமாகும். இது தைவானின், கிழக்கு மாவட்டத்தில், தைனானில் அமைந்துள்ளது.

தைவான் சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம்
Taiwan Sugar Research Institute
台糖研究所
Established1901
Missionதைவானின் பொருளாதாரத்தினை மேம்படுத்துதல்
Ownerதைவான சர்க்கரை கழகம்
Locationகிழக்கு மாவட்டம், தைனான், தைவான்
Coordinates22°57′56.3″N 120°13′13.3″E / 22.965639°N 120.220361°E / 22.965639; 120.220361

வரலாறு

தொகு

இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1901ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]

வசதிகள்

தொகு

இந்த ஆராய்ச்சி மையத்தில் 375 ஹெக்டேர் பரப்பில் விவசாய நிலங்கள் ஆய்விற்காகக் கரும்பு பயிரிட உட்பட 387 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[1] இது தொடர்ச்சியான உயிர்-உலைகள் மற்றும் கீழ்நிலை செயலாக்க வசதிகளைக் கொண்டுள்ளது. ஆய்வகத்தில் வண்ணப்படிவுப் பிரிகை நெடுவரிசைகள், சவ்வு பிரிப்பான்கள், தெளிப்பு உலர்த்தி மற்றும் படிகமயமாக்கல் வசதிகள் உள்ளன.

ஆராய்ச்சி

தொகு

உத்திகளைப் பயன்படுத்தி கரும்பு உற்பத்தியினை அதிகரிப்பதற்கான ஆய்வுகளும் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத் தன்மையுடைய கரும்பு இனங்களைக் கண்டுபிடிப்பதும் தற்போதைய ஆராய்ச்சி நோக்கமாக உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு