தொகுப்புப் பொறியியல்

தொகுப்புப் பொறியியல் ( Systems Engineering ) என்பது பல்வேறு பொறியியல் துறைகளுக்குள் ஊடாக இருக்கும் ஒரு பாகம் ஆகும் . கடினமான பொறியியல் செயற்றிட்டத்தை அமைப்பதற்கும் , இயக்குவதற்கும் பயன்படும் ஒரு துறை ஆகும் . இடப்பெயர்வுகள் , பல குழுக்களின் சேர்வைகள் , அதிகப்படியான தானியங்கி இயந்திரங்களை இயக்குவது மற்றும் கடின செயற்றிட்டங்கள் போன்ற விடயங்களில் தொகுப்புப் பொறியியல் பயன்படுத்தப்படும் . தொகுப்புப் பொறியியல் , திட்டத்தின் வேலை முறைகளையும் , அந்தப் பணிகளுக்காகன மூல இயந்திரங்களையும் , கட்டுப்பாட்டுப் பொறியியல் , திட்டப்பணி மேலாண்மை போன்ற மனிதர் முன்னின்று ஒழுங்குபடுத்தல் போன்றவற்றைக் குறித்ததாகும் .

தொகுப்புப் பொறியியல்

வரலாறு

தொகு

ஆங்கிலத்தில் உள்ள system engineering என்ற சொல் 1940களில் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும் [1]. ஒரு தொகுப்பு அல்லது அமைப்பின் தன்மையை அறிவதற்கும் அதனை நன்கு கையாள முயற்சி செய்வதற்குமான தேவை , பாகங்களின் மொத்த தன்மையானது முழு அமைப்பின் தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதால் ஏற்பட்டதாகும் . இதனால் தற்காப்பு துறை மற்றும் சில ஆலைகளை தொகுப்புப் பொறியியல் கையாள தூண்டியது [2].
ஒரு தொகுப்புத் திட்டத்தில் புதிய பரிமாணங்கள் அமையாத போதும் , அதற்கு தேவையான நவீன கருவிகள் கிடைக்காத போதும் , அந்து தொகுப்பில பற்றாக்குறை ஏற்படுவதுடன் , அதில் மாறுபட்ட முறைகளை உருவாக்குவதில் முனைகிறார்கள் . அவ்வாறு செயல்படும் பொழுது கடிமை கூடுகின்றது[3] . தொகுப்புப் பொறியியலின் பரிமாணங்கள் இன்றும் தொடர்கின்றது . இது புதிய முறைகள் மற்றும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கவும், அதனை வளர்க்கவும் உதவுகிறது . இதுமாதிரியான திட்டங்களினால் கடினங்கள் கூடிவரும் பொறியியல் அமைப்புகளை இயக்க பெரிதும் நன்மை உண்டாகிறது . தொகுப்புப் பொறியியலில் பிரபலமான கருவிகள் இந்நாட்களில் வளர்க்கப் பட்டது USL , UML ,UFD and IDEF0 போன்றவைகளாகும் .

1990 ஆம் ஆண்டில் பல்வேறு அமெரிக்க துறை சார்ந்த பணியாளர்கள் சேர்ந்து தொகுப்பு பொறியியலுக்கான ஒரு தொழிற் சமூகத்தை நிறுவினார்கள் . அதன் பெயர் தேசிய தொகுப்புப் பொறியியல் மன்றம் ( National Council on Systems Engineering ) . இதன் சுருக்கம் தே.தொ.பொ. மன்றம் ( NCOSE ) . இந்த மன்றத்தின் நோக்கம் தொகுப்பு பொறியியல் பற்றிய சோதனைகளையும் , கல்வியினையும் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது . 1995 ஆம் ஆண்டில் சர்வதேச தொகுப்பு பொறியியலாளர்களின் ஆர்வமும் ஈர்க்கப்பட்டதன் பின் இது சர்வதேச தொகுப்புப் பொறியியல் மன்றம் என்று பெயர் மாற்றப்பட்டது . இதன் சுருக்கம் ச.தொ.பொ மன்றம் ( INCOSE ) ஆகும் [4]. பல நாடுகளின் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , பல பொறியாளர்களுக்கும் இவை பாடமாக கர்ப்பிக்கப்பட்டது[5] .

கோட்பாடு

தொகு

தொகுப்பு பொறியியலை பொறியியல் துறையின் அணுகலாகவும் , சமீபத்தில் அது பொறியியலின் அடக்கமாகவும் கருதப்படுகின்றது .பொறியியல் துறையில் அணுகுமுறையை எளிமையாக்குவதும் , மற்ற பொறியியல் துறையில் உள்ளது போல் புதிய முறைகளை அல்லது ஆய்வுகளை மேற்கொள்வதும் தான் தொகுப்புப் பொறியியலை படிப்பதின் நோக்கம் . ஒரு அணுகலாகப் பார்த்தால் , தொகுப்புப் பொறியியல் பல பொறியியல் துறையின் ஊடகமானது ஆகும் .

மூலமும் மரபும்

பொறியியல் மரபானது திட்டம் உருவாக்கல் , அதை வளர்த்தல் , பின் தயாரித்தல் மற்றும் இயல் சாதனங்களை இயக்குதல் மற்றும் பிறகு தொகுப்புப் பொறியியலை பயன்படுத்தல் ஆகியவை ஆகும் . இங்கு தொகுப்புப் பொறியியலானது தனித்த கொள்கைகளையும் , செயல் முறைகளையும் , நிறுவன வடிவமைப்பு போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கடினமான இயல் சாதன செயல்பாடுகளை எளிமையாக்குதல் ஆகும் . தொகுப்புப் பொறியியல் செயற்றிட்டத்திற்கு மிக நன்றான எடுத்துக்காட்டு அப்போல்லோ நிரல் ஆகும் .

மேற்கோள்கள்

தொகு
  1. Schlager, J. (July 1956). "Systems engineering: key to modern development". IRE Transactions EM-3: 64–66.
  2. Arthur D. Hall (1962). A Methodology for Systems Engineering. Van Nostrand Reinhold. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-03046-0.
  3. Andrew Patrick Sage (1992). Systems Engineering. Wiley IEEE. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-53639-3.
  4. INCOSE Resp Group (11 June 2004). "Genesis of INCOSE". Retrieved 2006-07-11.
  5. a b INCOSE Education & Research Technical Committee. "Directory of Systems Engineering Academic Programs". Retrieved 2006-07-11.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகுப்புப்_பொறியியல்&oldid=3359361" இலிருந்து மீள்விக்கப்பட்டது