தொகைச்சொல்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தொகை என்னும் சொல்லுக்கு குறிப்பிட்ட வகையினத்தைச் சுட்டும் பொதுச் சொல்லாகும். ஒரே வகையின் கீழ் அடங்கும் வரையறுக்கப்பட்ட சில சொற்களின் பொதுப்பெயர் தொகைச் சொல் எனப்படும்.
சில தொகைச்சொற்கள் பின்வருமாறு:
தொகை | விரி |
---|---|
இருவினை | நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை |
இருதிணை | உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை |
முத்தமிழ் | இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் |
முப்பால் | அறம், பொருள், இன்பம் |
மூவிடம் | தன்மை, முன்னிலை, படர்க்கை |
மூவேந்தர் | சேரன், சோழன், பாண்டியன் |
நாற்றிசை | கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு |
நானிலம் | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் |
ஐந்திணை | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை |
ஐம்பால் | ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின் |
முக்கொடி | வில் அம்பு, மீன், புலி |
நான்மறை | இரிக், யசூர், சாம, அதர்வண |
ஐம்பொறி | மெய், வாய், மூக்கு, கண், செவி |
ஆதாரம்
தொகு- தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு சமச்சீர்க் கல்வி தமிழ்ப் பாடநூல். பக்க எண்: 52
- தமிழ் இணையக் கல்விக் கழக பக்கச் செய்தி (தொல்காப்பியம்)
- தமிழ்மொழி.வலை வலைப்பூ பக்கம் (வெளி இணைப்பு) பரணிடப்பட்டது 2017-06-23 at the வந்தவழி இயந்திரம்