தொடர்க் குதை
தொடர்க்குதை (serial port) என்பது கணினியுடன் தொடர்ச்சாதனங்களை இணைக்கப்பயன்படும் ஒரு குதையாகும். தனிநபர் கணினி வரலாற்றில் மோடம், டெர்மினல் போன்றவற்றிற்குத் தரவு தொடர்க் குதை மூலம் கடத்தப்பட்டது. தொடர்க் குதை இல்லாத நவீன கணினிகளுக்கு RS232 தொடர்ச்சாதனங்களை இணைக்க தொடர்-யுஎஸ்பி மாற்றிகள் தேவைப்படலாம். தொடர்க் குதை இன்னும் சில இடங்களில் பயன்படுகிறது. குறிப்பாக தொழிற்சாலை தானியங்கி அமைப்புக்கள், அறிவியல் கருவிகள், கடைகள் போன்ற இடங்களில் பயன்படுகிறது. சர்வர் கணினிகள் தொடர்க்குதைகளை ஆய்ந்தறியும் ஒரு கட்டுப்பாட்டுப் பணியகமாகவும் பயன்படுத்தலாம்.