தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண்
தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண் என்பது கீழ்க்காணும் முறையில் அறியப்படும் ஒரு சிறப்பெண் ஆகும். இதன் மதிப்பு 8.700036625...என நிறுவியிருக்கிறார்கள். இச்சிறப்பெண்ணை அறிய முதலில் ஒரு சமபக்க முக்கோணம் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த முக்கோணத்திற்கு உள்ளே, முக்கோணத்தின் பக்கங்களைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு ஒரு உள்தொடு வட்டம் வரைதல் வேண்டும். பின்னர் அந்த முக்கோணத்தைச் சூழ்ந்து முக்கோண முனைகளைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு சூழ்தொடு வட்டம் வரைதல் வேண்டும். பிறகு இந்த வட்டத்தைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு கட்டம் (சதுரம்) வரைதல் வேண்டும். இந்த கட்டத்தின் முனைகளைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு சூழ்தொடு வட்டம் வரைதல் வேண்டும். பிதகு இந்த வட்டத்தைத் தொட்டுக்கொண்டு ஒரு ஐங்கோணம், பிறகு சூழ் தொடுவட்டம், பின்னர் அறுகோணம், பின்னர் தொடுவட்டம் என்று வரைந்து கொண்டே முடிவின்றிச் சென்றால், அடையக்கூடிய வட்டத்தின் ஆரம், முதலில் முக்கோணத்திற்குள் இட்ட தொடுவட்டத்தின் ஆரத்தை விட எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை குறிக்கும் நிலை எண்ணாகும் இச்சிறப்பெண். இவ்வெண் ஏறத்தாழ[1][2] 8.700036625....என நிறுவியிருக்கிறார்கள்.