தொடர் (நூலகவியல்)

நூலகவியலில் தொடர் (series, serial) என்பது வரிசையாக தொடர்ச்சியாக வெளிவரும், பொதுவாக இலக்கமிடப்பட்ட படைப்புக்களைக் குறிக்கும்.[1] பொதுவாக அதன் இறுதி முன்கூட்டி முடிவுசெய்யப்படுவதில்லை. தொடர்கள் பல வகையான ஊடக வடிவங்களில் வெளிவருகின்றன. இதழ், ஆய்விதழ், நாளிதழ், ஆண்டு அறிக்கை, விபரத் திரட்டி, சிறப்பு வெளியீடுகள், பல்லூடகத் தொடர்கள் எனப் பல்வகைப்பட்டவை தொடர்கள் உள்ளன.

மேலாண்மை தொகு

தொடர்களை மேலாண்மை செய்வது நூலகவியலில் சவால் மிக்க ஒன்றாகக் கருதப்படுகின்றது. தொடர்களில் வெளியீட்டு ஒழுங்கு முறையற்றதாக இருக்கும். அவற்றின் தற்போதைய நிலை, எதிர்காலம் கேள்விக்குரிய ஒன்றாகும். அவற்றின் தலைப்பு, உள்ளடக்கம், ஊடகம் மாற்றப்படலாம். அவற்றின் காப்புரிமைகளும் கூடிய சிக்கல்கள் வாந்த ஒன்றாகும். இது போன்ற காரணங்களால் தொடர்களை மேலாண்மை செய்வது நூலகவியில் ஒரு சிறப்புச் செயற்பாடு ஆகும்.

துறை தொகு

இந்தத் துறையில் சிறப்புச் தேர்வு பெற்றவரை இதழ்கள் நூலகவியலாளர் அல்லது தொடர்கள் நூலகவியலாளர் என்பர். North American Serials Interest Group, Inc. இத் துறை சார்ந்தவர்களின் விடயங்களில் சிறப்பு அக்கறை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Chiou-Sen Dora Chen (1995). "Serials Management - A Practical Guide". American Library Association. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_(நூலகவியல்)&oldid=2182691" இலிருந்து மீள்விக்கப்பட்டது