தொட்டறி உணரி

தொட்டறி உணரி (Tactile sensor) என்பது தொடுதல், விசை அல்லது அழுத்தம் போன்றவற்றை உணரக்கூடியதாக உள்ள ஒரு ஆற்றல்மாற்றி ஆகும்.[1] தொட்டறி உணரி எங்கெல்லாம் தொடு பரப்பும், அளக்கவேண்டிய மற்றும் பதிவுசெய்ய வேண்டிய சுழ்நிலையும் தொடர்புகொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் பொருத்தப்படும். தொட்டறி உணரிகள் தானியங்கியல், கணினி மென்பொருள் போன்ற பல வகைப் பயன்பாடுகளை கொண்டுள்ளது; பத்திரக் கட்டகத்திற்கும் கூட.

தானியங்கிவியலில் ஒரு புதிய திசைக்கு கொண்டுசெல்லக்கூடிய வகையில் ஒரு குறைந்த செலவுடைய தொட்டறி உணரியை கண்டறிந்துள்ளதாக ஹார்டுவேர்டு பல்கலைக்கழத்தின் பயன்பாட்டு அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[2] இவ்வாய்வில் தானியங்கியின் கை முரட்டுத்தனமாக தனக்கு கொடுத்தப் பணிகளைச் செய்யாமல் மென்மையாக செயல்படுகின்றன என ஹார்டுவேர்டு பல்கலைக்கழத்தின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Tactile Sensing—From Humans to Humanoids
  2. http://www.newelectronics.co.uk/electronics-news/tactile-sensor-brings-a-new-dimension-to-robotics/49337/
  3. "Robot hands gain a gentler touch". ஏப்ரல் 18, 2013. Archived from the original on 2013-04-19. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டறி_உணரி&oldid=3559584" இலிருந்து மீள்விக்கப்பட்டது