தொட்டா ஆலத மரா

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையிலுள்ள பெரிய ஆலமரம்

தொட்டா ஆலத மரா என்னும் பெரிய ஆலமரம், 400 ஆண்டுகள் பழமையான ஆலமரமாகும். இது கருநாடகத்தின் பெங்களூருவில் உள்ள கேட்டோஹள்ளி என்ற கிராமத்தில் உள்ளது.[1] இந்த ஒற்றை மரம் சுமார் 3 ஏக்கர் (12,000 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

தொட்டா ஆலத மரா
மரத்தினுடைய வேர்
வகைஆலமரம் (ஆல்)
இடம்கேட்டோஹள்ளி, பெங்களூரு, கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்12°54′34″N 77°23′44″E / 12.90944°N 77.39556°E / 12.90944; 77.39556
விதைக்கப்பட்டது17ம் நூற்றாண்டு

இம்மரத்தினுடைய முக்கியத்தண்டானது 2000-களில், ஏதோ ஒரு இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டது, தற்போது இதனுடைய கிளைகளைக்கொண்டு வாழ்ந்து வருகிறது.

சுற்றுலா

தொகு

இப்பெரிய ஆலமரமானது பெங்களூரில் இருந்து 28 கிமீ தொலைவில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது[1].மெஜஸ்டிக்கிலிருந்து, கெங்கேரி வரையிலும் பேருந்து வாயிலாக சென்றால், கெங்கேரியில் இருந்து தொட்ட ஆலட மராவிற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. கே. ஆர். மார்க்கெட்டிலிருந்து நேரடிப்பேருந்து வசதியும் உள்ளது.

பெரிய ஆலமரம்

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "10 trees may get heritage status in Karnataka". Business Line. 2010-08-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டா_ஆலத_மரா&oldid=4156977" இலிருந்து மீள்விக்கப்பட்டது