தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை

தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்ற வில்லியம் ராசு வாலசின் கவிதை, தாய்மையே உலகில் மாற்றத்தை உருவாக்குவதற்கான முதன்மையான சக்தி என்று போற்றுகிறது. இக்கவிதை முதன்முதலில் 1865இல் "உலகத்தை ஆளுவது எது" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அந்தக் கவிதையே இப்போது பெரும்பாலும் மறந்துவிட்டாலும், அதன் பல்லவி பொதுவாக மேற்கோள் காட்டப்படும் பழமொழியாக மாறியுள்ளது.[1][2]

லூமிசின் பனுவலில் இருந்து (1898)

ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குபவரே அக்குழந்தையின் குணத்தையும் தீர்மானிக்கின்றார்; எனவே, அதன் நீட்சியாக, அடுத்து வரும் தலைமுறையின் சமூகக் குணங்களையும் தீர்மானிக்கின்றார் என்பதே இத்தொடரின் பொருள்[3].

மேற்கோள்கள் தொகு

  1. Dickenson, Mary Lowe (1904). "Higher Education and Motherhood". The Phrenological Journal 117 (4): 151. "No saying is more quoted than: 'The hand that rocks the cradle is the hand that rules the world.'". 
  2. Famous Poems from Bygone Days. Dover publications. 1995. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0486286231. https://archive.org/details/famouspoemsfromb0000unse. 
  3. "the hand that rocks the cradle rules the world". lexico.com. Archived from the original on 21 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 21 Jan 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)