தொண்டைமானாற்றுப் பாலம்
தொண்டைமானாற்றுப் பாலம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு வண்டிகளுக்கும் பாதசாரிகளுக்குமான சாலைப் பாலம். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், வல்வெட்டித்துறை நகருக்கு அண்மையில் வடமராட்சி கடல் நீரேரிக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இது முதலில் 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[1] உள்நாட்டுப் போரின் விளைவாக 1985ல் இது அழிந்துபோனது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் இது மீள அமைக்கப்பட்டது.
தொண்டைமானாற்றுப் பாலம் | |
---|---|
போக்குவரத்து | AB21 நெடுஞ்சாலையில் மோட்டார் வண்டிகள் |
தாண்டுவது | வடமராட்சி கடல் நீரேரி |
இடம் | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாண மாவட்டம் |
பராமரிப்பு | வீதி அபிவிருத்தி அதிகாரசபை |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1953 |
அமைவு | 9°49′0″N 80°10′0″E / 9.81667°N 80.16667°E |
இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து, கடல்நீர் வடமராட்சிக் கடல் நீரேரிக்குள் வராமல் தடுப்பதற்கான ஒரு தடுப்பணையாகவே இது பயன்பட்டு வந்தது. இத்தடுப்பணை 1985ல் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களினால் அழிந்துவிட்டது.[2] அழிவதற்கு முன் இதன் மதகுக் கதவுகள் கடல்நீர் நீரேரிக்குள் வருவதைத் தடுப்பதற்கு மட்டுமன்றி, மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் செல்ல அனுமதிப்பதற்கும் பயன்பட்டது.[2] 2004ல் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் இந்தப் பாலத்தையும் தடுப்பணையையும் மீளக் கட்டியது. இது தற்போது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் ஒரு முக்கிய இணைப்பாகப் பயன்படுகிறது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A river for Jaffna – the Arumugam Plan". Archived from the original on 2009-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
- ↑ 2.0 2.1 2.2 "Thondamannar sluice gate to be reconstructed". பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
- ↑ "A River for Jaffna". Archived from the original on 2003-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.