தொதல் அல்லது தொடோல் (சிங்களம்: දොදොල්), (ஆங்கில மொழி: dodol) என்பது இலங்கைச் சோனகர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புவகை உணவு ஆகும்.[1] இது மலாயா வழியாக இலங்கை வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[2] இப்பண்டம் யாழ்ப்பாணத்தில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.[3] இதனைப் பச்சரிசி, தேங்காய், சீனி, பயறு, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்வர்.

தொதல்
மாற்றுப் பெயர்கள்இப்பலகாரம் சர்க்கரைக் கழி
வகைகுளிர்ச்சியான
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்புவகை
முக்கிய சேர்பொருட்கள்இதனைப் பச்சரிசி, தேங்காய், சீனி, பயறு, முந்திரி, ஏலக்காய்

யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் 'சர்க்கரைக் கழி' என்று அழைக்கப்படுகிறது.[4] சிங்களவர்கள் இதனைக் களுதொதல் என்பார்கள். அவர்கள் கித்துள்பனங்கட்டியையே தொதல் செய்யப் பயன்படுத்துவார்கள்.


மேற்கோள்கள்

தொகு
  1. http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article5510184.ece
  2. http://books.google.ae/books?id=hWLQSMPddikC&pg=PA97&lpg=PA97&dq=kalu+dodol&hl=en#v=onepage&q=kalu%20dodol&f=false
  3. "இது கீழக்கரை ஸ்பெசல் தொதல்". Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-09-10.
  4. http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article5510184.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொதல்&oldid=4052214" இலிருந்து மீள்விக்கப்பட்டது