தொன் மார்ட்டினோ த சில்வா விக்கிரமசிங்க
தொன் மார்ட்டினோ த சில்வா விக்கிரமசிங்க (Don Martino de Zilva Wickremasinghe, 1865-1937)[1] இலங்கையை சேர்ந்த கல்வெட்டியல், மற்றும் தொல்லியல் அறிஞர் ஆவார்.
தொன் மார்ட்டினோ த சில்வா விக்கிரமசிங்க | |
---|---|
பிறப்பு | 1865 |
இறப்பு | 1937 |
தேசியம் | இலங்கையர் |
துறை | கல்வெட்டியல் தொல்லியல் |
பணி
தொகுஇவர் இலங்கை அரசில் எச். சி. பெல் என்பவரின் கீழ் கல்வெட்டியலாளராகப் பணியாற்றினார்.[2] பின்னர் இவர் தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இலங்கையின் ஆரம்ப வரலாற்றைப் பற்றிக் கூறும் "எபிகிராஃபியா சிலானிக்கா" (Epigraphia Zeylanica) என்ற நூலின் இரண்டு பாகங்களின் தொகுப்பாசிரியராக இருந்து பணியாற்றியமை இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்நூலின் மூன்றாம் பாகத்தை வெளியிடும் பொறுப்பை அவர் செனரத் பரணவிதானவிடம் ஒப்படைத்தார்.[3]
1909 ம் ஆண்டு விக்கிரமசிங்க தமிழ் மொழிக்கும் தெலுங்கு மொழிக்குமாக முதலில் விரிவுரையாளராகவும் பின்னர் வாசிப்பாளராகவும் ஆக்ஸ்போர்டு, இயேசு கல்லூரியில் நியமிக்கப்பட்டார். ஏனைய பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் சிங்களம், பாளி மற்றும் சமக்கிருத மொழிகளின் தேர்விற்கு ஒரு புற பரிசோதகராக இருந்துள்ளார்[4] இலண்டனில் இருந்த போது இவர் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்கள மொழி நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார்.[5]
முக்கிய கட்டுரைகள்
தொகு- Wickremasinghe, M. d. Z. (1901). "Art. XIII.—The Semitic Origin of the Indian Alphabet." Journal of the Royal Asiatic Society (New Series) 33(2): 301-305.
- Wickremasinghe, M. d. Z. (1931). "On the Etymology and Interpretation of Certain Words and Phrases in the Aśoka Edicts." BSOAS 6(2): 545-548.
சில நூல்கள்
தொகு- Tamil Grammar Self-Taught and Tamil Self-Taught (1906)
- Malayalam Self-Taught (1916)
குறிப்புகள்
தொகு- ↑ Wickremasinghe's death reported in Paranavitana, "Preface," Epigraphia Zeylanica 4 (1934-1941) (London, 1943): p. iii.
- ↑ Review of Epigraphia Zeylanica, vol. 1 by E. Müller in Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (Jan., 1905), pp. 183-186.
- ↑ Senarath Paranavitana, "Preface," Epigraphia Zeylanica 3 (1928-1933) (London, 1933): p. iii.
- ↑ http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-oxford-professor-without-a-degree/article6410132.ece
- ↑ Don Martino de Zilva Wickremasinghe, Catalogue of the Sinhalese printed books in the library of the British Museum (London: British Museum, 1901). Online catalogue: http://copac.ac.uk/search?&author=Don+Martino+de+Zilva+Wickremasinghe+&sort-order=ti%2C-date