தொலைத்தொடர்புப் பிணையம்

தொலைத்தொடர்பு வலையமைப்பு அல்லது தொலைத்தொடர்புப் பிணையம் (Telecommunication network) என்பது தொலைவில் உள்ள இரு முனையக் கணுக்களிடையே தொலைத்தொடர்பு கொள்ள பயன்படுவதற்கான பல முனையக் கணுக்கள், பிணைப்புகள் மற்றும் ஏதேனும் இடைப்பட்ட கணுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலையமைப்பைக் குறிப்பதாகும். செலுத்துதல் பிணைப்புகள் கணுக்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும்.

ஒரு தொலைத்தொடர்புப் பிணையம் உருவாக எவ்வாறு கணுக்கள் பிணைப்புகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டு. இந்தக் காட்டில் மரக்கிளைகள் போன்ற வடிவமைப்புக் காட்டப்பட்டிருப்பினும் சுற்றுக்களை உள்ளடக்கிய பல பிணையங்களும் இருக்கின்றன.

கணுக்கள் மின்சுற்று நிலைமாற்றல், தகவல் நிலைமாற்றல் அல்லது பொட்டல நிலைமாற்றல் போன்ற தொழினுட்பங்களைக் கொண்டு, சரியான சேரிட முனையக் கணுவினை அடைந்திட, குறிப்பலைகளை சரியான பிணைப்புகள் மற்றும் கணுக்கள் வழியே செலுத்துகின்றது. பிணையத்தில் உள்ள ஒவ்வொரு முனையத்திற்கும் தனக்கான தனிப்பட்ட பிணைய முகவரி|முகவரி வழங்கப்படுகிறது; இதனால் தகவல்களும் இணைப்புகளும் சரியான பெறுநருக்கு வழிசெலுத்தப்படுகிறது.

தொலைத்தொடர்பு வலையமைப்பு முக்கிய பயன்பாடானது ஒரு பயனரின் ஏதோ ஒரு வகையான தகவலை அந்த வலையமைப்பில் உள்ள வேறொரு நபருக்கு கொண்டு செல்லல் ஆகும். இந்த பயனர்களையே தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் என்பர். சந்தாதாரர்கள் குரல், தரவு போன்ற பல விதமான தகவல் கொடுக்கவும், பெறவும் எண்ணியிருப்பர். இதனால் ஒரு தொலைத்தொடர்பு வலையமைப்பானது பல விதமான சேவைகளை செய்யும் வெவ்வேறு வலையமைப்பை கொண்டிருக்கும். இதில் பொதுவாக அனைத்து வகையான தொலைத்தொடர்பு வலையமைப்பிலும் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய மூன்று வலையமைப்புகள் மட்டும் பின்வருமாறு:

  1. செலுத்துதல் (transmission)
  2. இணைப்புமாற்றல் (switching)
  3. குறிப்பலையிடல் (signalling)


தொலைத்தொடர்பில் உள்ள சில வலையமைப்புகளின் எடுத்துக்காட்டுகள்: