தொலைபேசியில் ஒட்டு கேட்கும் வழக்கு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
.தொலைபேசியில் ஒட்டு கேட்கும் வழக்கு:
தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனினும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் அரசு அதைச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொலைபேசி பேச்சை அரசு ஒட்டு கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநலன் வழக்கை மக்கள் சிவில் உரிமை கழகம் (பியுசில்) என்ற அமைப்பு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கை நீதிபதிகள் குல்தீப் சிங், சாஹீர் அகமது கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்துத் தீர்ப்பளித்தது. தனிநபரின் அந்தரங்கத்தில் தலையிடுவது அடிப்படை உரிமைக்கு முரணானது. தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்பது அத்தகைய உரிமையை மீறுவதாகுமென்று பெஞ்ச் தெரிவித்தது. 1855 ஆம் ஆண்டு இந்திய தந்திச் சட்டம் பிரிவு 2ஆம் விதிகளின் படி தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்க அரசுக்குத் தகுதியிருந்தாலும், நியாயமான வகையில் விதிமுறைகளை உருவாக்கி அரசு தெளிவுபடுத்த வேண்டும். அது வகுக்கப்படும் வரையில் தொலைபேசி பேச்சை ஒட்டு கேட்பது குறித்த வழிகாட்டுதலை அரசு உருவாக்குமாறு பெஞ்ச் கோரியது. . விதிகள் உருவக்கப்படும் வரையில் சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. 5 ஆம் பிரிவின் படி தொலைபேசி பேச்சை ஒட்டு கேட்பதற்கு ஒன்றிய அரசின் உள்துறைச் செயலர் அல்லது மாநில உள்துறை செயலரிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்
சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் ஒன்றிய அரசு அல்லது மாநில அரசின் கூடுதல் செயலருக்குக் குறையாத அந்தஸ்துள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
தனது உத்தரவில் நீதிமன்றம் மேலும் கூறியிருப்பதாவது, தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்க அனுமதிப்பது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தேவைப்பட்டால் அதிகபட்சமாக 6 மாதம் வரை அனுமதியுண்டு.
தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்க அனுமதிக்கும் எந்த ஆணையையும் மறுமதிப்பீடு செய்ய மத்தியிலும் மாநிலங்களிலும் ஆய்வுக் குழுவை நியமிக்க வேண்டும். ஆணையை இரண்டு மாதங்களுக்குள் கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும். மைய அரசில் அமையும் குழுவில் மத்திய அமைச்சகச் செயலர், டெலிகாம் செயலர் இருப்பர், மாநில அளவில் அரசுத் தலைமைச் செயலர், உள்துறை செயலர் அங்கம் வகிப்பர். தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து அனைத்து ஆவணங்கள் மற்றும் இதர நிருவணங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.