தொல்காப்பியம், அகத்திணையியல், சொல்விளக்கம்

தொல்காப்பியம் என்னும் பண்டைய நூலில் வாழ்க்கையை விளக்கும் இலக்கியப் பாங்கினை வகைப்படுத்தி நெறிமுறை இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அவற்றில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியன அகப்பொருள் பற்றியவை. இவற்றில் அகப்பொருளின் பொதுவான அடிப்படைக் கூறுகள் அகத்திணை இயலில் கூறப்பட்டுள்ளன. களவியலில் காதலன்-காதலியர் வாழ்க்கை நெறிகளும், கற்பியலில் திருமணத்திற்குப் பின்னர் கணவன்-மனைவியரிடையே நிகழும் வாழ்க்கை நெறிகளும் தொகுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. [1] இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்கள் எதனை, எந்த நூற்பாவில் உணர்த்துகின்றன என்பதை இங்கு அகரவரிசைத் தொகுப்பில் காணலாம்.

குறியீட்டுக்குறுக்க விளக்கம்
அக=அகத்திணையியல்
எண்=இந்த இயலில் வரும் நூற்பா வரிசை எண்

அ வரிசை

தொகு
  1. அடியோர் - அடிமைத்தொழில் செய்வோர் – அக 25
  2. உணா - நிலத்தில் விளையும் உணவு – அக 20
  3. உயர்ந்தோர் - நாற்குலத்தில் உயர்ந்த அந்தணர் – அக 28
  4. உரிப்பொருள் - திணைக்கு உரிய நடத்தை – அக 3
  5. உள்ளுறை உவமம் - தலைவன் தலைவியரின் பாங்கு புலப்படும் வகையில் இயற்கை நிகழ்வை மட்டும் கூறுதல் – அக 49, 50, 51
  6. ஊதியம் - வருவாய் – அக 44
  7. எஞ்சியோர் - பிற அகப்பொருள் மாந்தர். – அக 45
  8. எழுதிணை - கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை. – அக 1
  9. ஏனோர் - தினைநிலைப்பெயர் அன்றிப் பிறர், குறவன், குறத்தி, குறிஞ்சிநில மக்கள் – அக 24
  10. ஏனோர் - தன்னை ஒத்த பிறர் – அக 24
  11. ஏனோர் படிமைய - வழிபாடு – அக 30
  12. ஏனோர், ஏவல் மரபின் ஏனோர் - தொழில் செய்ய ஏவப்படுபவர் – அக 26
  13. ஐந்திணை, அகன் ஐந்திணை, - அகப்பொருள் மாந்தரின் பெயர் இதில் கூறப்படுவது இல்லை – அக 57
  14. ஐந்திணை, நடுவண் ஐந்திணை - முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், - அக 2
  15. ஓதல் - வேதம் ஓதுதல் – அக 27

க வரிசை

தொகு
  1. கருப்பொருள் - தாய் வயிற்றுக் கருவைப் போல நிலத்திணையின் கருவாக உள்ளவை – அக 3
  2. கலந்தபொழுது காட்சி - பிரிந்த தலைவனைத் தலைவி காணும் காட்சி – அக 18
  3. குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருள் – அக 16
  4. குறிஞ்சி - மைவரை உலகம், - அக 5
  5. கைக்கிளை - ஏழு திணைகளில் ஒன்று – அக 1
  6. கைக்கிளை - காம உணர்வு மிகாத ஒருத்தியை விரும்பிய ஒருவன் தன் பெருமையைப் பற்றியும், அவள் அழகைப் பற்றியும் அவளிடம் பேசி அவளிடமருந்து விடை பெறாமல் ஏங்கும் ஒருதலைக் காமம் – அக 53
  7. கைக்கிளை - தன் ஆசைக்கு இணங்காவிட்டால் மடலேறுவேன் எனல் – அக 55
  8. கொண்டுதலைக் கழிதல் - தலைவன் தலைவியைத் தன் ஊருக்குக் கொண்டு செல்லல் – அக 17
  9. கௌவை, கற்பொடு புணர்ந்த கௌவை - தலைவனிடன் சென்ற தலைவியை அவளது தமர் அவளை மீட்டுக்கொண்டு செல்லும் காலத்துத் தலைவன் மனம் கலங்கிப் பேசுதல் – அக 44

ச வரிசை

தொகு
  1. செய்தி - நிலத்தவர் செய்யும் தொழில் – அக 20
  2. சேயோன் - மைவரை உலகத்தின் தெய்வம், - அக 5

த வரிசை

தொகு
  1. தாளாண் பக்கம் - முயன்று பொருள் தேடுதல் – அக 44
  2. திணை மயக்கம் - நிலம் மயங்காது – அக 14
  3. திணை மயக்கம் - உரிப்பொருள் மயங்காது – அக 15
  4. திணைநிலைப் பெயர் - ஆ மேய்ப்போர் ஆயர், வேட்டையாடுவோர் வேட்டுவர் என்பது போல் அமைவன. – அக 22, 23
  5. தூது - அரசன் விடும் தூது – அக 27
  6. தூது - வேந்து வினை இயற்கை – அக 34
  7. தெய்வம் - நிலத்தெய்வம் – அக 20
  8. தெய்வம், மொழிப்பொருள் தெய்வம் - பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படும் தெய்வம் – அக 39

ந வரிசை

தொகு
  1. நிமித்தம் - முன் அறியும் குறி – அக 39
  2. நெய்தல் - எற்பாடு பொழுது – அக 10
  3. நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருள் – அக 16
  4. நெய்தல் - பெருமணல் உலகம், - அக 5

ப வரிசை

தொகு
  1. பரத்தை - பலருக்கு உடலின்பம் தருபவள், தலைவன் இவளிடம் செல்வான். மனைவியிடம் #மீள்வான். மனைவி ஊடுவாள். தலவன் பணிவான். தேற்றுவான். – அக 44
  2. பறை - நிலத்தவர் முழக்கும் பறை – அக 20
  3. பாங்கர், பாங்கோர் பாங்கு - தலைவனின் துணைவர் – அக 44
  4. பாலை - நடுவுநிலைத் திணை, நண்பகல் பொழுது, வேனில் பருவம், பின்பனியும் – அக 11, 12
  5. பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருள் - அக 16
  6. பிரிவு (இரு வகை) - கொண்டுதலைக் கழிதல், பிரிந்து அவண் இரங்கல் – அக 13, 17
  7. புலன் நெறி வழக்கம் - இலக்கண நெறி வழக்கம் – அக 56
  8. புள் - நிலத்தில் மேயும் பறவை – அக 20
  9. பெருந்திணை - ஏழு திணைகளில் ஒன்று. – அக 1
  10. பெருந்திணை - மடல் எறி வந்து ஊரார் உதவியால் ஒருத்தியைப் பெறுதல், இளமை தீர்ந்த முதியவளிடம் உடலுறவு கொள்ளுதல், தன் வலிமையால் இழுத்து உடலுறவு கொள்ளல் ஆகியவை – அக 54
  11. பொருள், ஒண்பொருள் - ஒளி தரும் பொருள் – அக 30

ம வரிசை

தொகு
  1. மரம் - நிலத்துக்கு உரிய மரம் – அக 20
  2. மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருள் – அக 16
  3. மருதம் - தீம்புனல் உலகம், - அக 5
  4. மருதம் - வைகறை விடியல் என்னும் இரு பொழுதுகளும் – அக 9
  5. மா - நிலத்தில் திரியும் விலங்கினம் – அக 20
  6. மாயோன் - காடுறை உலகின் தெய்வம். – அக 5
  7. முதற்பொருள் - நிலம், பொழுது – அக 3, 4
  8. முந்நீர் வழக்கம் - கடலில் செல்லுதல் – அக 37
  9. முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் உரிப்பொருள், - அக 16
  10. முல்லை - காடுறை உலகம், - அக 5
  11. முல்லை - கார்ப்பருவம் மாலைக்காலம், - அக 6
  12. முல்லை - பனி-எதிர் (கூதிர்) பருவமும் – அக 7
  13. மேலோர் - அந்தணர் – அக 31
  1. யாழின் பகுதி - நிலத்தவர் மீட்டும் யாழ்ப்பண் – அக 20

வ வரிசை

தொகு
  1. வருணன் - பெருமணல் உலகத்தின் தெய்வம். – அக 5
  2. வழக்கம் - மூன்று வகை, நாடக-வழக்கு, உலகியல் வழக்கு, பாடல் சான்ற புலன்நெறி வழக்கு – அக 56
  3. வன்புறை - வற்புறுத்தல் – அக 42
  4. விழுமம் - இன்பம், துன்பம் – அக 42
  5. வினைவலர் - கைவினைக் கலைஞர் – அக 25
  6. வேந்தன் - தீம்புனல் உலகத்தின் தெய்வம், இந்திரன் என்பது இளம்பூரணர் உரை. – அக 5
  7. வையம் (நிலம்) - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், - அக 2

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பியர், தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை 14, 2010