தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்
தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர் சேனாவரையர். இவரது உரை சேனாவரையம் என்றே போற்றப்படுகிறது.
- இவரது உரைப்பாங்கு
- தொல்காப்பியர் வடநூல் கருத்தைத் தழுவியே நூல் செய்தார் என்னும் கருத்துடையவர் சேனாவரையர். [1]
- இவர் வடநூற்கலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
- உயர்திணை அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறி. [2]
- இந் நூற்பாவில் சிவணி என்னும் வினையெச்சம் உயர்திணை என்னும் வினைக்குறிப்பினை கொண்டு முடிந்தது. [3]
- அடிசில் என்பது உண்பன, தின்பன, பருகுவன, நக்குவன என்னும் நால் வகைக்கும், அணி என்பது கவிப்பன, கட்டுவன, செறிப்பன, பூண்பன, என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன, ஊதுவன, எழுப்புவன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், படை என்பது எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன தொடக்கத்தனவற்றிற்கும் பொது ஆகலின் அடிசில் அயின்றார், மிசைந்தார் என்றும், அணி அணிந்தார், மெய்படுத்தார் என்றும், இயம் இயம்பிடார், படுத்தார் என்றும், படை வழங்கினார், தொட்டார் என்றும் பொதுவினையால் சொல்லுக. இவ்வாறன்றி அடிசில் அயின்றார், மிசைந்தார் என்றும், அணி கவித்தார், பூண்டார் என்றும், இயம் கொட்டினார், ஊதினார் என்றும், படை எறிந்தார், எய்தினார் என்றும் ஒன்றற்கு உரியதனால் கூறின் மரபுவழு என்க. [4]
இவ்வாறு இவரது உரை பல நுட்பங்களைக் கொண்டது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பரிசோதித்தது, இரண்டாம் பதிப்பு 1934