தொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரை
தொல்காப்பியம் சொல்லதிகாத்துக்குக் கிடைத்துள்ள ஐந்து உரைகளில் தொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரையும் ஒன்று. இந்த உரையின் ஆசிரியர் பெயர் தெரியாத காரணத்தால் இதனைப் 'பழைய உரை' எனக் குறிப்பிடுகின்றனர். இதன் உரையில் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரையிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. எனவே இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கணிக்கப்பட்டுள்ளது. [1]
உரைநலம்
தொகு- முன்னோர் உரைகளைத் தழுவி உரை எழுதுகிறார்.
- எடுத்துக்காட்டுகளைத் தம் இயல்புக்கு ஏற்பத் தருகிறார்
- முன்னோர் பாடல்கள் பலவற்றை எடுத்துக்காட்டுகளாகத் தருகிறார். [4]
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், கு. சுந்தரமூர்த்தி எழுதிய விளக்க உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
அடிக்குறிப்பு
தொகு- ↑ திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி ஆராய்ச்சி முன்னுரை,
- ↑ இவர் தம்மைப் பாண்டிநாட்டவர் எனத் தமது உரையில் காட்டிக்கொள்கிளார். செப்பு வினா பற்றிய தொல்காப்பிய நூற்பாவுக்கு (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 13) விளக்கம் கூறுகையில் 'நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்' - இது இளம்பூரணர் விளக்கம். 'நும் நாடு யாது என்றக்கால், பாண்டிநாடு என்பது' - இது பழைய உரையாசிரியர் விளக்கம். இதனால் இவரது நாடு பாண்டிநாடு எனக் கொள்ளப்படுகிறது.
- ↑ இவர் தன்னைச் சைவர் என்பதையும் தம் உரையில் புலப்படுத்துகிறார். ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய வாய்பாடுகளில் நாற்றம் என்பதும் ஒன்று. இதனை விளக்குகையில் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் நறுநாற்றம், தீநாற்றம் எனப் பிரித்துக் காட்டி 'இதனின் நாறும் இது' எனக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பழைய உரை நறுநாற்றத்துக்கு 'பூதி என்னும் திருநீறு நறுநாற்றம் உடையது' என்று குறிப்பிடுகிறார்.
- ↑
ஒன்றுபல குழீஇயதும் வேறுபல குழீஇயதும்
ஒன்றிய கிழமையும் உறுப்பின் கிழமையும்
மெய் பிரிது ஆகியதும் என ஐம்பால்
உரிமையும் அதன் தற்கிழமை (அகத்தியம்)