தொல்காப்பியம் புறத்திணையியல் செய்திகள்
வாழ்க்கையை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் பகுத்துக் காண்பது தமிழர் நெறி. அகப்பொருளை அகத்திணை என்றும், புறப்பொருளைப் புறத்திணை என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. புறத்திணை என்பது பொதுவாழ்க்கை. இந்தப் பொதுவாழ்க்கைப் பாங்கைக் கூறுவது இந்தப் புறத்திணையியல். அகத்திணையை 7 பிரிவுகளில் தொகுத்துக்கொண்ட தொல்காப்பியம் புறத்திணையையும் 7 பிரிவுகளாகக் கொள்கிறது. அத்துடன் அகத்திணையையும் புறத்திணையையும் ஒப்பிட்டும் காட்டுகிறது. புறத்திணைச் செய்திகள் 30 நூற்பாக்களில் சொல்லப்பட்டுள்ளன. [1]
செய்திகள்
தொகு- வெட்சித் திணை 14 வகை என்றும் அதன் துறைகள் 21 என்றும் கூறித் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது. [2]
- வஞ்சித் திணையின் துறைகள் 13. [3]
- உழிஞைத் திணை 8 வகை என்றும் 12 துறைகளைக் கொண்டது என்றும் காட்டப்படுகிறது. [4]
- தும்பைத் திணையின் பகுதிகள் இரண்டு. துறைகள் 12. [5]
- வாகைத் திணையின் வகைகள் ஏழு. துறைகள் இரு பகுதிகளில் ஒன்பதாக உள்ளன. [6]
- காஞ்சித் திணை என்பது தொல்காப்பியத்தில் நிலையில்லாத உலக வாழ்க்கை பற்றிய செய்திகளைக் கூறுவது. [7]
- பாடாண் திணை என்பது ஆண்மகனையும், கடவுளையும் பாடுவது. [8]
துறை-விளக்கம், அகர வரிசை
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ இளம்பூரணர் பகுப்பு
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 59 முதல் 63
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 64, 65
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 66 முதல் 69
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 70 முதல் 72
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 73 முதல் 75
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 76, 77
- ↑ நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 78 முதல் 88