தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை

இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களம், அந்நாட்டில் உள்ள தொல்லியல் மரபுரிமை தொடர்பான பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பிரிவு ஆகும். இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின்போது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. அனுராதபுரம், பொலநறுவை போன்ற மறக்கப்பட்ட பண்டைக்காலத் தலைநகரங்களின் மீது ஏற்பட்ட ஆர்வமே அப்போதைய இலங்கை அரசாங்கம் தொல்லியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்தன.

நோக்கமும் பணிகளும்

தொகு

இலங்கையில் தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் இத்திணைக்களம் முக்கிய பணீயாகக் கொண்டுள்ளது.[1]

தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பில், தேவையான மனித வளங்களையும், நிறுவன வளங்களையும் உருவாக்கிப் பேணுதல்; நாடு முழுவதிலும் உள்ள தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்; அவற்றைப் பதிவு செய்தல்; இம்மரபுரிமை தொடர்பாக மக்களிடையே அறிவை வளர்த்தல்; தொல்லியல் களங்களையும், நினைவுச்சின்னங்களையும், தொல்பொருட்களையும் பேணிப் பாதுகாத்தல்; தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்பன இத்திணைக்களத்தின் செயற்பாட்டு வரம்புக்குள் அடங்குகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "தொல்பொருளியல் திணைக்களம் இலங்கை, அறிமுகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.
  2. "தொல்பொருளியல் திணைக்களம் இலங்கை, அறிமுகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.

வெளியிணைப்புக்கள்

தொகு